விதிமுறைப்படி செலவு (வேலை) செய்ய படுகிறதா.. ? என்பதை கவனிப்பது நம் கடமை... உரிமை... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[12 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27960
நகரில் புதிய புதிய அமைப்புகள் தோன்றியதால் நன்மைகள் என்ன என்று வினா எழுப்பும் சகோதரர்கள் இதை விளங்கி கொள்ளட்டும்... நாம் செலுத்தும் நமது வரி பணம் நமது நகரிலேயே முறைகேடு செய்யபடுவதை இந்த புதிய அமைப்பு நகர் மக்களின் பார்வைக்கு தருகிறார்கள்... மேலும் இந்த ஊழல் எதிர்ப்பு இயக்க அமைப்பு பல அரசு சம்பந்தமான வேளைகளில் முழு கவனம் செலுத்தி அது முறையாக ஒப்பந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலைகள் நடைபெறுகிறதா என்பதனை கவனித்து - அதில் முறைகேடுகள் நடப்பதாக சந்தேகம் ஏற்படுமானால் மாவட்ட ஆட்சியர் - அது சார்ந்த துறைகள் - பொது மக்கள் பார்வை- நீதி துறைகள் மூலம் முறைகேடுகளை தடுக்க உதவுகிறார்கள்...
நாம் நமக்கு அறிந்த நமது நகராட்சி வேளைகளில் முறைகேடுகள் அறிந்தால் ஆதாரபூர்வமாக அதை இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை பரிமாறலாம்.. இதனால் நமது வரி பணம் வீண் போவதை தவிர்க்கலாம்...
நமது வரி பணம் மூலம் நமது நகராட்சியின் வேலையை பெறும் ஒப்பந்தக்காரர் முறைகேடுகள் இல்லாமல் நல்ல முறையில் விதிமுறைப்படி செலவு (வேலை) செய்ய படுகிறதா.. ? என்பதை கவனிப்பது நம் கடமை... உரிமை...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross