செய்தி: ஜெயசேகரன் மருத்துவமனையுடன் இணைந்து காயல்பட்டினம் நல அறக்கட்டளை நடத்திய மருத்துவ இலவச முகாம்! 800க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புண்ணியம் செய்யும் கண்ணியவர்கள் உள்ளவரை காயல் வாழும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanpu)[13 June 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28009
நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துமனை மருத்துவர்கள்குழு முதன்முறையாக கலந்துகொண்டு மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற மருத்துவ முகாம்.
அல்ஹம்திலில்லாஹ்!
இப்புண்ணிய காரியத்திற்கு முதன்மையாக இருந்து செயலாற்றிய காயல்பட்டணம் நல அறக்கட்டளை
(KWT )கும்,அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த த.மு.மு.க, காக்கும்கரங்கள், பாப்புலர் பிரண்ட் மற்றும் பல இம்முகாமோடு இணைந்த அத்தனை அமைப்புகளுக்கும், உணவு மற்றும் பல உதவிகளுக்கு அனுசரணையாய் இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்!
தலைமை மருத்துவர் தமது உரையில்,நான் இதுவரை கண்டிராத ஒரு பெரிய மருத்துவ முகாமை இந்த காயல் பட்டணத்தில் கண்டு உள்ளம் களிப்புருகிறேன்!
இம்முகாமை வெற்றிபெறசெய்ய எங்களுக்கு உதவியாக இருந்த KWT மற்றும் அதோடு பணியாற்றிய அமைப்பு களுக்கும்,குறிப்பாக காயல் மக்களுக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்!
நாகர்கோவிலில் ஆரம்பத்தில் எங்கள் மருத்துமனை துவங்கிய நேரத்தில்,எங்களை தொடர்புகொண்டு எங்கள் சிகிச்சை மீது நம்பிக்கை கொண்டு எங்களுக்கு ஆதரவு தந்து எங்கள்வளர்ச்சிக்கு தூணாகஇருந்து தோல்கொடுத்துதவிய இக்காயல்நகர மக்களுக்கு நான் என்றென்றும் நன்றிகடன் பட்டிருக்கிறேன் என்று எல்லோர் நெஞ்சம்நெகிழ,
தன் பெருந்தன்மை பேருரையில் குறிப்பிட்டிருக்கிறார்!
KWT ன் முக்கிய முழு முயற்சியால் நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமை தடைசெய்யுங்கள் என்று சில விஷமிகள் ஆர்.டி.ஓ அவர்களிடம் மனுகொடுத்து
அது மாவட்ட ஆட்சிதலைவர் வரை சென்று,,
இப்புண்ணிய மருத்துவ முகாம் எந்த இடையூறும் இல்லாமல் நடந்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சிதலைவர் உறுதியாககட்டளையிட்டதாக,
இம்முகாமை முன்னின்று நடத்தியவர்கள் மனவேதனயுடன் கூறினார்கள்!
மக்கள் நலனில் அக்கறையுள்ள மனிதநேயமிக்க மாவட்ட ஆட்சிதலைவருக்கு காயல் மக்களின் சார்பாக நன்றிகள் நிறைய சென்றடையட்டும்!
KWT ஆரம்பித்த நாளில் இதன்உதயம் குறித்து முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்கள் போல் முளைத்திருக்கிறது,மழைகாலம் முடிந்தால் இதுவும் மறைந்துவிடும் என்று ஏளனம் பேசியவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என காணமுடியாமல் காணாமல் போய்விட்டார்கள்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross