ஓங்கியடிக்கும் ஓர் எச்சரிக்கை மணி! posted bykavimagan (doha..qatar.)[15 June 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 28052
ச்சே ச்சே என்ன ஒரு புழுக்கம்..
விசிறியைச் சுழற்ற மின்சாரம் இல்லை..
ஒரே ஒரு வழிதான்...
குடிநீர்க் குழாயைத் திறந்து அதன்
அடியில் உட்கார்ந்தேன்....
"என்ன ஒரு சுகமான காற்று"......
நேர்மறை எழுத்தாளர் சுஐப் காக்கா அவர்களை வருக வருக என
"எழுத்து மேடை" வாசகர்கள் சார்பாக வரவேற்கிறேன்.பத்து
ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த "தண்ணீர் தேசம்" நினைவுக்கு
வருகிறது....
"மழை நீர் சேகரிப்புத் திட்டம்" என்ற மகத்தான
திட்டத்தை அம்மா அவர்கள் அறிமுகம் செய்த போது ஏளனம்
செய்தவர்கள் எண்ண அலையில் வந்து போகின்றார்கள். என்னைக்
கவராத படைப்பாளியின் "தண்ணீர் தண்ணீர்" நினைவுகளை
நனைக்கிறது. எக்கச்சக்க இலக்கணப் பிழையுடன் நான் எழுதிய
முதல் கவிதை "மழை" முப்பதாண்டுகளுக்குப் பின் மூளையில்
சாரல் அடிக்கிறது..இத்தனைக்கும் காரணம் காக்கா அவர்களின்
இந்தப் பதிவு...ஓங்கியடிக்கும் ஓர் எச்சரிக்கை மணி...ஒரு சமூக
சிந்தனையாளனின் சக்தி வாய்ந்த படைப்பு...ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் இந்தக் கட்டுரை சலனத்தை ஏற்படுத்தும்...
பிரார்த்திப்போம் படைத்தவனிடம்...தண்ணீரைத் தந்து நம்
கண்ணீரை மாற்ற..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross