மிகவும் கவலைகிடமாக இருப்பதாக ஊரில் இருந்து ஒரு தந்தி கொடு... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[22 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28223
கடிதம் பல பறந்தாலும் ஜனாபுக்கு உரைக்காது. “இதை தந்தி போல பாவித்து எழுதுகிறேன்... உடனே பணம் அனுப்பி வையுங்கள்” என்று பாவமாக எழுதுவாள். (C - P) பல ஜனாப்கள் மத்தியில் நான் வேறுபடுகிறேன்...
சிறு வயதில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரு கம்பெனியில் பணி செய்து கொண்டு இருந்த போது அந்த பணி மனதிற்கு பிடிக்காத காரணத்தால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற (தப்பிக்க) அன்று இந்த தந்தி மிக உதவியாக எனக்கு அமைத்தன...!
ஊரில் இருந்த நண்பர் மூலம் என் பெயருக்கு என் கம்பெனி முகவரிக்கு என் அப்பா (அவர்கள் இந்த தந்தி மேட்டருக்கு பல வருடம் முன்னே வபாத் ஆகிவிட்டார்கள்) மிகவும் கவலைகிடமாக இருப்பதாக ஊரில் இருந்து ஒரு தந்தி கொடு என்று சொல்லி பின்பு என் நண்பரும் அதை சொன்னபடியே செய்து அந்த தந்தியில் உள்ள வாசகத்தை நிறுவனத்தில் காட்டி அங்கு இருந்து தப்பித்தேன்... இன்று தந்தி என்றாலே இப்போதும் நினைவிற்கு இது வந்து மறையும்...
வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதியிலிருந்து தந்தி சேவைக்கு நிரந்தரமாக மூடுவிழா நடத்தப்போவதாக பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கிறது. (C - P)
சரி சரி... இந்தியாவில் உள்ள அணைத்து தந்தி ஆபீசுகளில் இருக்கும் இந்த தந்தி கருவிகள் அனைத்தையும் ஒரு குவியல் படுத்தினால் நியாயமான பித்தனை உலோகம் கிடைக்குமே...! ஏலம் எப்போது...? அறிவியுங்கள் ஆசிரியர் - கே.எஸ். முஹம்மது ஷூஐப் அவர்களே...
உங்களின் கட்டுரை இந்த இணையதளத்தில் மேலும் தொடர வேண்டும்... வாழ்த்துக்கள்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross