தகவல் தொழில் நுட்பத்தில் அசுர வளர்ச்சி posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[22 June 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 28230
மோர்ஸ் கண்டுபிடித்த (படத்தில் உள்ள ) இந்த கருவியின் பயன்பாடு தந்தி சேவைக்கு எப்போதோ நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். நமது நாட்டில் 1970~85 களில் teleprinter / telex ன் பயன்பாடு அதிகமாக ஆரம்பித்து விட்டது. உண்மையாக அப்போதிலிருந்தே இந்த தந்தியின் உபயோகம் முற்றுலுமாக நின்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரு நகரங்களிலும் மாவட்ட தலை நகரங்களிலும் உள்ள தந்தி அலுவலகங்களில் teleprinter / telex ன் பயன்பாடுதான் இன்று வரை இருந்து வந்தது. எனினும் தற்போதுதான் அதிகாரபூர்வமாக இந்த தந்தி சேவை நிறுத்தப்படுகிறது. தந்தி சேவை முற்றிலுமாக நின்றுவிட்டாலும்கூட இந்த telex சேவை மட்டும் மிகுதியான வங்கி /அலுவலகங்களில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. காரணம், பண பரிவர்த்தனைகளில் அச்செய்தியின் நம்பகத்தன்மை. telex செய்தியை இடைமறிக்க முடியாது.சென்சார் செய்ய முடியாது.
பிறகு fax பயன்பாட்டுக்கு வந்து இன்னும் அது நடை முறையில் உள்ளது.அது telex விட குறைந்த செலவில் அனுப்ப முடிந்தது.1985~ 90 களில் computer பிறகு internet உபயோகம் வந்த பிறகு telecommunication ல் அசுர வளர்ச்சி. email புழக்கத்திற்கு வர ஆரம்பித்து விட்டது. இடைப்பட்ட காலத்தில் வந்த pager வெகு சீக்கிரமாகவே மறைத்து விட்டது. தற்போது நாம் உபயோகிக்கும் அலைபேசி 1995 களில் நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு , தகவல் தொழில் நுட்பத்தில் ஐரோப்பிய நாடுகளைக்காட்டிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம். நம் நாட்டில் அலைபேசியின் செலவும் குறைவு. பயன்பாடும் அதிகம்.
பிற விஷயங்களில் நம் நாடு எவ்வளவு பின்தங்கி இருந்தாலும் தகவல் தொடர்பு துறையில் மட்டும் நாம் உலகின் முன்னணி நாடாகவே இருக்கிறோம் என்பது பெருமையே.இந்த பெரும் மாற்றத்திற்கு வித்திட்டவர் ராஜீவ் காந்தி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross