Re:...தந்தி தந்த வெறியும் வெற்றியும் posted bymackie noohuthambi (colombo)[25 June 2013] IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 28274
தந்தி பற்றி நினைக்கும்போது என் தந்தை மக்கி ஆலிம் சொன்ன செய்தி நினைவுக்கு வருகிறது.
அவர்களது தந்தை நூஹு தம்பி லெப்பை ஆலிம் அவர்கள் கண்டியில் ஒரு தபால் நிலையத்துக்கு போய் ஒரு தந்தி எழுதி கேட்டார்களாம். எங்களுக்கு அதெல்லாம் வேலை கிடையாது தந்தி எழுதிக் கொண்டு வந்தால் அதை அனுப்புவோம். போங்க போங்க என்று இஞ்சி குடித்தானாம் ஒரு அலுவலர். என்னை போன்ற கோபம் உள்ளவர்கள்தான் அவர்கள், மன்னிக்கவும். அவர்களுடைய கோபம்தான் எனக்கும் உள்ளது. அது குல விருது என்று என் தந்தை சொல்வார்கள். உடனே அவர்கள் வெளியேறி தன மகனை நீ ஓதியது போதும் (அவர் ஒரு ஹாபில்). கல்லூரியில் சேர்ந்து படி. ஆங்கிலம் தெரியாததால் நான் பட்ட கேவலம் நம் குடும்பத்தில் யாரும் படக்கூடாது என்று சொல்லி அவர்களை படிக்க வைத்தார்களாம். அவர்கள் double promotion பெற்று படிப்பில் ஆங்கிலத்தில் வெற்றி வாகை சூடியபோது எனது அப்பா அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லி மாளாதாம். ஆனால் அவர்கள் நீண்ட நாள் வாழவில்லை.
எனது வாப்பா எப்படியோ அதே மாதிரி என்னையும் படிக்க வைத்தார்கள். ஆங்கிலத்தில் தூள் கிளப்பும் SK மச்சானோடு நானும் இணையாக ஆங்கிலம் பேசும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு தந்துள்ளான் என்று மற்றவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
தந்தியினால் ஏற்பட்ட குளறுபடிகளும் உண்டு. ஒரு மனிதனை கொல்ல வேண்டும், விட்டு விடாதீர்கள் என்று சொல்வதற்கு, kill him. not leave him என்று கொடுத்த தந்தியில் கமா இடம் மாறி விழுந்துவிட்டது. kill him not, leave him. அந்த நபரை கொன்று விடாதீர்கள் விட்டு விடுங்கள் என்று அர்த்தம் சொல்லி அவர் விடுவிக்க பட்டார்.
ஒரு கர்ப்பிணி பெண் ரயிலில் பிரயாணம் செய்தார், அவர் சென்ற berth தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார், அவர் அடுத்தநாள் புறப்படுகிறார். வீட்டுக்கு தந்தி கொடுத்தார் i gave birth to a child, coming tomorrow. berth என்று இருக்க வேண்டிய எழுத்து birth என்று மாறியதால் வந்த வினை, அவர் குடும்பத்தினர் திகைத்து விட்டார்கள்.
எப்படியோ சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த தந்தி நம்மை விட்டு விடை பெறுகிறது.
எவ்வளவோ நல்ல பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு போய்விட்டன அவற்றுக்காக நாம் வருந்துவதில்லை. ஆசிரியர் சொன்னது போல் பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம். இதை ஜீரணித்துக் கொள்ள நாம் பழகி கொண்டால் வாழ்க்கையில் வெற்றி தோல்விகள் ஏற்ற இறக்கங்கள் நம்மை பாதிக்காது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross