செய்தி: மாணவியர் உதவித்தொகை குறித்த ம.சே.கரங்கள் - தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி விவகாரம்! மாவட்ட கல்வி அதிகாரி முன்னிலையில் இக்ராஃ துணையுடன் தீர்வு காணப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அன்பு மாணவிகளே! posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[23 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2832
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த விவகாரத்துக்கு இக்ராஃ துணையுடன் தீர்வு காணப்பட்டது நல்ல செயல். இது பகை உணர்வு இல்லாத, எவரையும் பாதிக்காத, நட்புடன் கூடிய தீர்வு என்பதால், மாவட்டக் கல்வி அதிகாரிக்கே புரிந்திருக்கும் இந்த ஊர் மக்களிடம் பகைமை இல்லை, பழித் தீர்க்கும் எண்ணமில்லை, ஆனால் உரிமைக்காகப்
போராடுபவர்கள் என்று.
--------------------------------------------------
காயல்பட்டினம் மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி அவர்கள் தக்க நேரத்தில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இன்று நல்லதொரு முடிவு கிடைத்திருக்கிறது. இதனால் பலரும் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான வழிகள் பிறந்திருக்கிறது.
எனவே இனிமேல் இதுபோன்ற இடையூறுகள் மக்களுக்கு ஏற்படும்போது , பொது நலத் தொண்டுகளைத் தொடர்புக் கொண்டு நமது உரிமைகளைப் பெற வழி வகுங்கள். விழிப்புணர்வு அடையுங்கள்.
--------------------------------------------------
அன்பு மாணவிகளே!
மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்ச்செல்வி அவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான உண்மை விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்ததுடன், உதவித்தொகை இதுவரை பெறாத மாணவியரும், உதவித்தொகை வேண்டாமென பெற்றோர் மூலம் கடிதம் பெறப்பட்டிருந்த மாணவியரும் வரும் 28ஆம் தேதிக்குள் உரிய ஆவனங்களை பள்ளி தலைமையாசிரியரிடம் சமர்ப்பித்து கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவித்திருக்கிறார்.
ஆகையால் மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் உதவித்தொகை தேவையுள்ள மாணவியர் உடனே ஆவணங்களை சமர்ப்பித்து உதவித்தொகையைப் பெற ஆயத்தமாகுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross