கட் கடா கட்........................ posted bySK Shameemul Islam (Chennai)[30 June 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 28322
மிகக் குறைவாகப் பேச எழுத ஒருவருக்கு கற்றுக்கொடுத்ததே தந்திதான். இன்று தேவையற்றதை எல்லாம் கூட நேரம் போகாமல் குறுஞ்செய்தி மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் அன்றோ ஒரு வார்த்தை தேவையோடு ஒரு வார்த்தை சேர்ப்பதற்கு கூட பலமுறை யோசிக்கும் பழக்கம் தந்தியில்தான் இருந்தது.
ஏனெனில் ஒரு வார்த்தை சேர்ப்பதற்குள் சில ரூபாய்கள் காலியாகிவிடும். தந்தி பல வரலாறுகளைக் கூறும்.
ஷாபானு வழக்கில் தீர்ப்பு கொடுத்த அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டுக்கு எதிராக பிரதமருக்கு அனுப்பிய தந்திகள்...
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது நாடு முழுவதிலிருந்தும் காங்கிரஸ் அரசுக்கு அனுப்பப்பட்ட ஏராளமான தந்திகள்...
பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்த தடைவிதிக்கக் கோரி மத்திய அரசின் பல துறைகளுக்கு அனுப்பப்பட்ட தந்திகள்...
உள்ளூரில் ஒரே மதத்தை சார்ந்த இரு சாராருக்கிடையே நடைபெற்ற எண்ணற்ற மோதல்களில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் முதல் அமைச்சர், உள்துறை அமைச்சர் போன்றோருக்கும் அனுப்பப்பட்ட தந்திகள்...
என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
திருமணங்கள் நடைபெறுகையில் வந்து சேரும் தந்திகளைப் படித்துப் பார்ப்பதில் ஒரு மட்டற்ற மகிழ்ச்சிதான்.
கட் கடா கட் என்ற சப்தமும் அதை மொழி பெயர்த்து வழங்கும் அலுவலர்களின் செயலும் இன்றைக்கு நினைத்தாலும் ஒரு வினோதமான நிகழ்வுதான்.
இறை வழியில் அமைப்புப்பணி செய்த காலத்தில் சில நேரம் இரு வார்த்தைகளை ஒன்றாகத் தினித்து நாம் கொடுக்க சார் இது தனித் தனியாகத்தான் வரும்; அதற்கு இவ்வளவு காசு வரும் என அலுவலர் கூறும்போது வேறு எதைக் குறைப்பது என நினைத்த காலங்கள் என் சொந்த அனுபவத்தில் நிறைய உண்டு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross