பதவி விலகல் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[24 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2835
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகர் மன்றத் தலைவர் அவர்கள் கருத்துப்படி பார்க்கையில் சில உறுப்பினர்கள் பதவி விலக முன் வருவது அவசியமற்றச் செயலாகவேத்
தோன்றுகிறது.
1. பதவிக்காலம் முடிய சில மாதங்களே இருக்கிறது என்பது ஒரு காரணம்.
2. கற்புடையார் பள்ளி வட்டம் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகம் நேரடியாக அரசாங்கத்தின் கையில் இருப்பது அரசாங்கத் துறைகள் தரப்புக்கு சாதகமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது என்பதும் சிந்திக்க வேண்டியதே.
3. சதி வேலை முறியடிப்பு: ஜனவரி 31 வரை கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மறுதரப்பாருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பொருட்டு ஒரு திட்டமிட்ட சதி மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக செய்யப்பட, அந்நேரத்தில் அங்கிருந்த நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார், அதிகாரிகள் கேட்டதுபோல் ஆயத்தம் செய்யப்பட்டிருந்த அக்கடிதத்தைக் கொடுக்கக் கூடாது என்று தடுத்து, இதில் நகர்மன்றத்திற்கு ஒப்புதலில்லை என்று மற்றொரு கடிதம் எழுதி வந்திருந்த அதிகாரியிடம் கொடுக்க, “ஆட்சேபனையில்லை” என்ற கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த அவர், “ஆட்சேபனை” கடிதத்தைப் பெறாமலேயே சென்றுவிட்டார். இதன் மூலம் அன்று ஏற்பட இருந்த சதி முறியடிக்கப்பட்டது.
4. மக்கள் பிரதிநிதிகள் இருந்ததால்தான் திட்டமிட்ட சதிகள் முறியடிக்கப்பட்டன. நகராட்சி நிர்வாகம் நேரடியாக அரசாங்கத்தின் கையில் இருந்தால் என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்.
5. அதே நேரத்தில் எந்த ஓர் உறுப்பினராவது காசோலை மோசடி வழக்கில் நேரடியாக ஈடுபட்டிருப்பாரானால் அவர் அவசியம் விலக வேண்டியவரே.
6. மற்றப்படி தார்மீகப் பொறுப்பேற்று விலகுகிறோம் அப்படி, இப்படி என்று தயவு செய்து யாரும் அரசியல் ஆதாயம் பார்க்க வேண்டாம்.
ஊரின் நன்மையை கருதி , எல்லோரும் ஆலோசித்து எதையும் செய்யுங்கள்.
எந்த ஓர் உறுப்பினரும் மக்களுக்கு துரோகம் செய்வாரேயானால் அவருக்கு நிச்சயம் தண்டனை இறைவனால் இவ்வுலகிலும் கிடைக்கும்
என்பதை நினைவு கூர்ந்து செயல்படுவார்களாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross