Re:...அடி வயிற்றில் அமிலம் சுரக்கிறது posted bymackie noohuthambi (colombo)[01 July 2013] IP: 122.*.*.* Sri Lanka | Comment Reference Number: 28355
அடி வயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் செய்தி. அவனது பெற்ற தாயின் மனம் எவ்வளவு துடிக்கும், அவன் எப்படி துடித்திருப்பான், ஏற்கெனவே குடும்ப தலைவனை இழந்தவர்கள் இப்போது குலக் கொழுந்தை பறி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக. ஒரு ஷஹீத் உடைய நன்மை கிடைக்கும் என்று தேற்றுவதைவிட வேறு என்ன செய்ய முடியும். கண்கள் கண்ணீரை சிந்துகின்றன.
அந்த குடும்பத்துக்கு ஏதாவது பொருளாதார உதவிகள் செய்வதானால் இந்த இணைய தள ஆசிரியர் என்னையும் ஒருவனாக சேர்த்து கொள்ளுங்கள். பணத்தால் இழந்த உயிரை மீட்டி தர முடியாது. அவர்கள் விழிநீரை துடைக்கவாவது அது பயன்படும் அல்லவா.... வேறொன்றும் சொல்ல தோன்ற விலை.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர்கள் அல்லாஹ்வின் இந்த முடிவுக்கு தலை வணங்குவதை தவிர வேறு வழி இல்லை. அவனது நாட்டத்தில் என்ன இருக்கிறது என்று யார்தான் அறிய முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross