நாங்க ஆரம்பக் கல்வியை கற்றது சி கஸ்டம்ஸ் ரோட்டில் உள்ள எலிமென்டரி ஸ்கூல்லதான்......... posted byS.K.Shameemul Islam (Chennai)[03 July 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 28383
நாங்க ஆரம்பக் கல்வியை கற்றது சி கஸ்டம்ஸ் ரோட்டில் உள்ள எலிமென்டரி ஸ்கூல்லதான். நமக்கும் கை எட்டாமல் குட்டியாப்பு படித்த அனுபவம் உண்டு.
காலைல நேரத்தோடையே ஸ்கூலுக்கு வந்து ஒவ்வொரு வாத்தியாருக்கா ரிசெப்ஷன் நடத்துவோம்.
கரீம் சார் வாராங்க, கரீம் சார் வாராங்க. இது போல குலாம் சார், உச்சி மாணிக்கம் சார், மாணிக்கம் சார் என ஒவ்வொருவருக்கும்.
மூன்றாம் கிளாஸ் அந்த பள்ளிக்கூடத்தின் நிகழ்ச்சிகள் நடக்கும் மேடையில் இருக்கும்.
பெல் அடிக்கும் இரும்பு கம்பியை வைத்து குழி தோண்டி ஒவ்வொரு கல்லாக எடுத்து பெஞ்சில் இருந்தவாறே பெல்லில் கிளீன் போல்ட் செய்வதில் என் நண்பனும் உறவினனுமான செய்ம் சாய்ப் எக்ஸ்பெர்ட்.
அன்றைய வீர விளையாட்டுக்களே மரம் ஏறுவதும் கோட்டைச் சுவரில் ஏறி விளையாடுவதும் தான்.
இன்று ஆயிரம் படிகள் தாண்டி விட்டாலும் அன்று ஆனா, ஆவன்னா கத்துக்கொடுத்த கரீம் சாரும் குலாம் சாரும் மறக்க முடியாதவர்கள். எல் கே அப்பா ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையில் இன்ஸ்பெக்ஷன் வருவார்கள்.
நகம், முடி, பல், இத்துடன் யூனிபார்மையும் சோதிப்பார்கள்.
ஆறாம் கிளாஸ் போனதும் வித்தியாசமான பல அனுபவங்கள். நண்பர் ஹிஜாசார் அதில் பலதை கூறிவிட்டார்.
செருப்பு போடாமலே பாடம் நடத்தும் கண்ணன் சார் பிளேக் போர்ட் பக்கம் திரும்பும் போது குறும்பு செய்யும் மாணவர்களைப் பார்த்து கால்ல கடக்குற செருப்பாலேயே அடிப்பேன் என்று சொல்வார்.
what is a stone age எனக் கேட்டு ஏல கம்பெடுத்து வா எனக் கேட்கும் அக்பர் சாரை மறக்க முடியுமா. அன்றும் இன்றும் என் நண்பன் அடிவாங்கும் போது அவரைப் பார்த்து அழுவது போல நடித்து எங்களைப் பார்த்து சிரித்தாரே பார்க்கலாம். ஒரு நாள் சார் அதை பார்த்து பிருத்தெடுத்தது இன்றும் மறையாத ஞாபகம்.
நெற்றியில் வடியும் வேர்வையை ஒத்தை விரலால் துடைத்துக் கொண்டே தமிழ் பா பாடும் ஜோசப் சார் சுவாரஸ்யமான வகுப்பிற்கு சொந்தக்காரர்.
செய்ற அநியாயத்தலாம் செஞ்சிட்டு அந்த சாருக்கு வருடம் முடிவில் பார்ட்டி கொடுப்பவர்கள் நாங்களாகத்தான் இருக்கும். கண்ணன் சாருக்கு ஆருமுகநேரிக்குப் போய் கொடுத்தோமே.
கோயில் முத்து சார் ஊரிலிருந்து ஆறுமுகநேரிக்கு சென்று படம் பார்க்கும் சக மாணவர்களை கவனித்து விட்டு மறு நாள் வகுப்புக்கு வந்து அவர்களின் காதுகளில் ஓட்டை போடுவாரே பார்க்கலாம்.
ஹனீபா சார் மிக அருமையாக வகுப்பெடுப்பதில் கெட்டிக்காரர். ஏல TNT- னா Trinitrotoluene. அதுக்கு பதிலா Tamilnadu Transport என்று யாராவது எழுதுனா உரிச்சிபோடுவேன் எனச் சொல்லியும் சக மாணவர் ஒருவர் அவ்வாறே எழுதி உரிக்கவும் பட்டார். மாணவனையும் அடித்துவிட்டு தானும் அழும் பீட்டர் சாரை யார் மறப்பார். ஆங்கில வாத்தியார் திருமலை சாரை மறப்பது உகந்ததோ.
ஆங்கிலத்தை உச்சரிப்பு மாறாமல் உயர்வாகச் சொல்லித்தரும் தேவராஜ் சாரை மறத்தல் நியாயமோ.
திரு ஞானைய்யாவின் 10, 12 இரவு விசிட் மறக்க முடியாதது.
இப்படி படிப்பிலும் ஆர்வம் காட்டி குறும்பிலும் முதலிடம் வகித்த அந்த மாணவப் பருவம் என்றென்றைக்குமே மறக்க முடியாத ஒரு மகத்தான பருவம் தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross