ஒரு அபலைத் தாயின் விசும்பல்... posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[05 July 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 28410
விடலைகள் விவரமறியாது விபரீதத்தில் விளையாட, விதியும் கூட வந்து விளையாடி இன்னுயிர் பிரிந்து மண்ணுக்குள் புதைக்கப்படுகின்றனர். அவரது காலம் முடிந்துவிட்டது. ஆனால் காலமெல்லாம் கண்ணீர்த் துளிகள் காயாமல் கவலையுற்று கலங்கி வாடுவது பெற்றோர் உள்ளமே! வளர்த்து வாலிபமாக்கி உன்னை வாழ வைத்துப் பார்க்காமல் நொடிப்பொழுதில் மரணத்தை ஏற்று வாங்கி நொறுங்கிப்போவது நீங்கள் மட்டுமல்ல நீங்கா துயர் கொள்ளும் உங்கள் பெற்றோரும்தானே?
கவிமகனே! நீயும் ஒரு தந்தைதான் எனவேதான் உன் உள்ளக் குமுறல்கள் ஓராயிரம் கூர்முனை கொண்ட ஆணியாக எம் மனதில் பதித்து வைத்து விட்டாய்! இளங்கன்றுக்கு பயமேது? இக்கவிதையைக் கண்ட பலனால் இனி ஆபத்தை விலை பேச ஒருவரும் ஒருபோதும் முன்வராமாட்டார். பக்குவமில்லா பாலகர் வயதில் கடிவாளமில்லா பைக் எனும் அரக்கனை மறந்தும் கூட கொடுக்க மாட்டார் மதிப்புமிக்க பெற்றோர்கள்.
கவிதைதான் இதயத்தை முள்ளாய் தைக்கிறது எனில் புகைப்படமும் எம் நெஞ்சத்தைப் பொசுக்குதய்யா... வேண்டாம் பெற்றோரே...! இந்த விபரீத வினையாட்டம். பிள்ளைகளின் இன்னுயிர் மதிப்பு ஈன்றவர்க்கே தெரியும். இளங்கன்றுகளுக்கு அல்ல!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross