செய்தி: ஜூன் 27 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பால் ஒத்திவைப்பு!! வீடியோ காட்சிகளுடன் விரிவான விபரங்கள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒரு நகர்மன்றக் கூட்டம் எப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்பதை இவர்களின் கூட்டங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். வெறுமனே செய்தியைப் பார்த்துவிட்டு இருந்துவிடலாம் என்றுதான் எண்ணுகிறேன். ஆனால், மனதில் எழும் கேள்விகளைக் கேட்காவிட்டால் நானும் பொறுப்பற்றவனாகி விடுவேனோ என்று கருதி, என் மனதில் தோன்றும் சில கேள்விகளைக் கேட்கிறேன்.
(1) 29 கூட்டப் பொருட்களில் ஒன்று கூட வாசிக்கப்படவில்லை. ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், அஜெண்டாவில் உள்ளவற்றைத்தான் துவக்கமாக விவாதிப்பர் என்பது பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவரும் அறிந்த மரபு. இது, நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த ‘அதிமேதாவி’ உறுப்பினர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி? அதிலும் குறிப்பாக, இந்தக் கூட்டத்தின் துவக்கத்தில் அஜெண்டாவை வாசிக்க விடாமல் zero hourஇல் பேசப்பட வேண்டியவற்றை முதலிலேயே கேட்ட நகர்மன்ற உறுப்பினர் நண்பர் ஜஹாங்கீருக்கும் இந்த ஞானம் இல்லாமலா போனது?
(2) இரண்டாவது பைப்லைன் குறித்து கேள்வி கேட்ட நகர்மன்ற உறுப்பினர் சுகு அவர்கள் இரண்டு நகர்மன்றத்தைப் பார்த்தவர். அவருக்கும் இந்த அறிவு இல்லையா?
(3) சக உறுப்பினர் மீது உள்ள குரோதத்தை கண்டனத் தீர்மானமாகக் கேட்ட உறுப்பினர் சாமி ஐயா அவர்களே! பல நிர்வாகங்களில் பல பொறுப்புகளில் பணியாற்றவர் நீங்கள்! உங்களுக்குமா இந்த மரபு தெரியவில்லை?
என்ன நடக்கிறது நம் நகராட்சியில்? இதுவே இன்னொரு ஊர் என்றால், அனைவரையும் கூட்ட அரங்கிற்குள்ளேயே அடைத்துப் போட்டு, ஒன்னு திருந்துங்கள்! அல்லது அங்கேயே இருந்துகொள்ளுங்கள்!! என்று கூறி பெரிய திண்டுக்கல் பூட்டைப் போட்டுவிட்டுச் சென்றிருப்பார்கள். சுரணையற்றவர்கள்தானே நாம்?
அடுத்து துணைத்தலைவர் மேட்டருக்கு வருகிறேன்.
(4) பார்வையாளர்களில் ஒரு பெரியவரை நோக்கிப் பாய்ந்த “பாயும் புலி” அவர்களே! அப்படி அவர் செய்த தவறு என்ன?
(அ) உங்களைப் போல உரக்கப் பேசாததா?
(ஆ) வாயில் வரும் வார்த்தைகளையெல்லாம் கொட்டாததா?
(இ) உறுப்பினராக உங்கள் தகுதியை நீங்கள் உணராத நிலையில், ஒரு பார்வையாளராக தன் தகுதியை உணர்ந்து அவர் நடந்துகொண்டதா?
(ஈ) வீராவேசமாக அடிக்கச் சென்றீரே! அடித்திருக்க வேண்டியதுதானே? .........த்தில் அடித்தானாம்; பல் போச்சாம் என்று சொல்வார்களே அது போல, எங்கோ அவர் அரசியல் மேடையில் உம் பொது வாழ்வை விமர்சித்ததற்கு பழி தீர்க்க, எங்கள் பணத்தில் நடைபெறும் நகர்மன்றம்தானா உமக்குக் கிடைத்தது?
(5) தலைவி அவர்கள் “கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது” என்றதும், அவசர அவசரமாக ஒரு மடலை எடுத்துப் படித்தீர்களே? கூட்டத்தின் வாயிலில் நுழையும்போதே அதைப் படித்துவிட்டல்லவா வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்? கூட்ட அரங்கில் வைத்து அந்த மடலை தாங்கள் தயாரித்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறிருக்க, வெளிநடப்பு செய்ய வேண்டும் என்பது நீங்கள் முற்கூட்டியே போட்ட திட்டம் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?
(6) நம் சமுதாயத்தைச் சேர்ந்த - கோஷாவைப் பேணும் ஒரு பெண்மணி நகர்மன்றத் தலைவராக இருக்கிறார். அவரைப் பார்த்து “வவுந்து போடுவேன்” என்று ஒரு உறுப்பினர் கேட்கிறார். அப்போதெல்லாம் ரோசப்படாத எங்கள் “சமூக சேவகி” பெத்தாதாய், நடக்காத பிரச்சினையில் தலையிட்டு வீரத்துடன் சட்டம் பேசுகிறாரே? சூப்பர். அது அவர் தவறல்ல! அவரையும் தேர்ந்தெடுத்தார்களே அவர்களின் தவறு.
(7) எதையோ எதிர்பார்த்து வந்தவர்கள், அது நடக்காததால் ஏமாந்தது போன்று இருக்கிறது வீடியோ பதிவில் ஒவ்வொருவரின் முகமும்! அதை வெளிக்காட்டுகிறது “சுகுவார்” அவர்களின் வார்த்தை. “உங்க ஆள்களை வெச்சி.....” என்று பார்வையாளர்களைக் காண்பித்து, தலைவியை நோக்கிக் கூறும் அவரது வார்த்தை செயற்கையாகவே உள்ளது. நீர் எதிர்பார்த்தவர்கள் வராததால், தயாரித்து வந்திருந்த வாசகங்களை வேண்டாவெறுப்பாக கொட்டித் தீர்த்துள்ளீர்!
(8) கடைசியாக, வீரமங்கை சாராமா அவர்களை நோக்கி: மார்க்க நடைமுறை தெரிந்த - ஒழுக்கத்தை விரும்பக் கூடிய ஒரு பெண் எப்படி நடக்கக் கூடாது என்பதை இத்தனை நாட்களாக எங்கள் பிள்ளைகளுக்கு எழுத்துப் பாடமாகத்தான் நடத்திக் கொண்டிருந்தோம். இப்போது, வீடியோ பாடமாகவே நடத்தலாம் போல! இதுவரை ஒரு நான்கைந்து வீடியோ உள்ளது.
நல்ல வேளை! உங்களுக்கு வாக்களிக்கும் பாவத்தை நான் செய்யாமலிருந்தேன். (அல்லாஹ் காப்பாற்றினான்!) ஒருவேளை உங்களுக்கு வாக்களித்திருந்தால், இன்று சஊதியிலுள்ள என் தனியறையில் கதவை அடைத்துக் கொண்டு, என் காலில் கிடப்பதை எடுத்து என் தலையிலேயே அரை நாள் அடித்துக் கொண்டிருந்திருப்பேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross