இன்னும் குழப்பம்தான் posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[07 July 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 28456
ஆதார் என்பது அடையாள எண்ணே, அட்டை அல்ல என்றால் அரசு சலுகைகள், அடையாள நிரூபணம் (வங்கி கணக்கு திறக்க போன்ற) ஆகியவற்றிற்கு எவ்வாறு உதவ முடியும்? அப்படியானால் நமக்கு ஆதார் எண்ணை விட NPR மூலம் வழங்கப்படும் RESIDENT IDENTITY CARD தானே முக்கியம்? இரண்டில் எது முக்கியம்? RESIDENT IDENTITY CARD க்கு apply பண்ணினாலே ஆதார் எண் கிடைத்து விடுமா?
ஆதார் எண் வழங்குவது - இந்திய அரசாங்கத்தின் திட்டக்குழுவின் (PLANNING COMMISSION) திட்டம் தான் என்றால் அதற்க்கான பணிகள் தனியாக நடைபெறுமா? அப்படியானால் எப்போது நடைபெறும்?
இதுவரை நமது ஊரில் ஆதார் அடையாள அட்டைக்கு உண்டான பதிவு வேலைகள் நடைபெறுவதாகவே நாம் அறிந்திருந்தோம்.
அது NPR மூலம் வழங்கப்படும் RESIDENT IDENTITY CARD என்பது இப்போதுதான் தெரிகிறது.
[Administrator: நமதூரில் தற்போது நடைபெறும் NPR முகாம் மூலம் ஆதார் எண்ணும் வழங்கப்படும்.
ஆதார் எண்ணை பயன்படுத்தும் வங்கி போன்ற நிறுவனம் - ஆதார் எண்ணை கொண்டும், கூடுதலாக கை ரேகை போன்ற தகவல்களின் உதவி மூலமும் ஒருவரை அடையாளம் காணலாம்.
NPR ம், ஆதாரும் வெவ்வேறு காரணங்களுக்கு முக்கியமே.
NPR க்கான அடிப்படை தகவலும், ஆதாருக்கான அடிப்படைதகவலும் (கை ரேகை போன்ற biometric தகவல்கள் உட்பட) ஒன்றே என்பதால் - NPR சேகரிக்கும் தகவல் - ஆதாருக்காகவும் பகிர்ந்துக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross