காயல்பட்டினத்தில் தற்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) முகாம்கள் - வார்டு வாரியாக நடைபெற்றுவருகிறது. இந்த முகாம்கள் குறித்த சில சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலவுகிறது. பரவலாக நிலவும் சந்தேகங்களுக்கான சில விளக்கங்கள் இதோ:
*** தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) வேறு, ஆதார் எண் என்பது வேறு
*** தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பது - இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் (MINISTRY OF HOME AFFAIRS) திட்டம். ஆதார் எண் வழங்குவது - இந்திய அரசாங்கத்தின் திட்டக்குழுவின் (PLANNING COMMISSION) திட்டம்
*** காயல்பட்டினத்தில் தற்போது நடப்பது தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) முகாம், ஆதார் முகாம் அல்ல
*** தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) முகாம்களில் இந்தியாவில் வாழும் இந்தியரோ, வெளிநாட்டவரோ (USUAL RESIDENTS) பங்கேற்கலாம். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (NRIs) பங்கேற்க கூடாது
*** வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) பங்கேற்று பதிவு செய்திருந்தால் அவர்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த முகாமில் பதிவு செய்யப்படும் பெயர்கள் உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பார்வைக்கு (PUBLIC SCRUTINY) வைக்கப்படும். அப்போது அப்பெயர்களுக்கு ஆட்சேபனை எழும்பட்சத்தில் அப்பெயர்கள் நீக்கப்படும்
*** வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிரந்தரமாக இந்தியாவில் குடியேற முடிவு செய்த பிறகே NPR திட்டத்தில் பதிவு செய்யவேண்டும்
*** NPR முகாம்களில் பெறப்படும் தகவல்கள் ஆதார் எண் வழங்கும் UIDAI நிறுவனத்துடன் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. அந்த தகவல்கள் அடிப்படையில் UIDAI நிறுவனம் ஆதார் எண் வழங்கும் (Aadhaar through NPR Process)
*** பிற ஊர்களில் ஆதார் எண் பெற்ற காயலர்களும், தற்போது காயல்பட்டினத்தில் நடைபெறும் NPR முகாம்களில் கலந்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு புதிய ஆதார் எண் வழங்கப்படாது. பழைய எண்ணே பயன்படுத்தப்படும்
*** NPR திட்டம் மூலம் - 18 வயது மேற்பட்டோருக்கு - இந்திய அரசாங்கம் Resident Identity Card வழங்கவுள்ளது. இது ஸ்மார்ட் கார்ட் வகையை சார்ந்தது. இதில் ஆதார் எண்ணே இருக்கும்; NPR எண் என்று ஒன்றும் இருக்காது
*** வெளிநாடு வாழ் இந்தியர்கள் - ஆதார் எண் பெற தடை ஏதும் இல்லை. ஆனால் அவர்கள் காயல்பட்டினத்தில் தற்போது நடைபெறும் NPR முகாம் மூலம் ஆதார் எண் பெற இயலாது.
*** ஆதார் என்பது அடையாள எண்ணே, அட்டை அல்ல. ஆதார் எண் பெற்றவர்கள், அவர்கள் பெற்ற அட்டையை தொலைத்தாலும் பிரச்சனை இல்லை - அவர்களுக்கு வழங்கப்பட்ட எண்ணை அவர்கள் மறக்காத வரை
*** NPR மூலம் வழங்கப்படும் RESIDENT IDENTITY CARD - இந்தியாவில் வாழ உரிமை குறித்து தகுதி நிரூபிக்க பயன்படும்; ஆதார் எண் - அரசு சலுகைகள், அடையாள நிரூபணம் (வங்கி கணக்கு திறக்க போன்ற) ஆகியவற்றிற்கு உதவும்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 1:15 pm / 7-7-2013] |