காயல்பட்டினத்தில் தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இது வரை வார்ட் 1 முதல் வார்ட் 7 வரை, வார்ட் 18 ஆகிய இடங்களுக்கான பணிகள் நிறைவுற்றுள்ளது. வார்ட் 8 மற்றும் 9 பகுதிகளுக்கான முகாம் தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்த முகாமில் பங்கேற்போரின் அடிப்படை தகவலுடன் (பெயர், தந்தை பெயர், விலாசம், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண்) - அவர்களின் புகைப்படம், கை ரேகை, கண் ரேகை ஆகியவையும் பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட தகவல்கள் - ஆதார் எண் வழங்கும் UIDAI நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. பதிவான விவரங்களை - முகாமில் பங்கேற்றோர், https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLink என்ற இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.
முகாமில் பங்கேற்பவர்களுக்கு ஒப்புதல் ரசீது வழங்கப்படுகிறது. அதில் உள்ள பதிவு எண் (ENROLMENT NUMBER) மற்றும் பதிவு தேதி உதவிக்கொண்டு - விபரங்களை இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
ஒப்புதல் ரசீதில் பதிவு எண் - 1234/12345/12345 என்ற வடிவில் இருக்கும். தேதி - 12/12/2013 12:30:34 என்ற வடிவில் இருக்கும்.
முகாமில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் வெளிவர ஒரு வார காலம் வரை ஆகலாம். |