இம்மாதம் 07ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்கக் கருத்தரங்கம் நடத்துவதென - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 05ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று (நேற்று) இரவு 08.00 மணிக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அதன் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையுரையாற்றினார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நிறைவில், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - காயல்பட்டினம் வரும் நிர்வாகிகளுக்கு வரவேற்பு:
சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் புறப்பட்டு, 07.07.2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் காயல்பட்டினம் வந்து சேரும் – கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் - வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துர்ரஹ்மான் ஆகியோருக்கு, கட்சி உறுப்பினர்கள் தொடர்வண்டி நிலையம் வரை திரண்டு சென்று வரவேற்பளிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - இஸ்லாமிய திருமண சட்ட விளக்கக் கருத்தரங்கு:
07.07.2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் - மார்க்க அறிஞர்கள் பங்கேற்பில், இஸ்லாமிய சட்ட விளக்கக் கருத்தரங்கம் நடத்திடவும், நகர பொதுமக்கள் அனைவரையும் அந்நிகழ்வில் கலந்துகொள்ளச் செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - ஏரலில் நடைபெறும் கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்றல்:
07.07.2013 ஞாயிற்றுக்கிழமை மாலையில், ஏரல் நகரில் நடைபெறும் - சிறுபான்மையினர் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் திரளாகச் சென்று கலந்துகொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - ஏழைகளுக்கான ரமழான் இலவச அரிசி:
வழமை போல இவ்வாண்டும், எதிர்வரும் ரமழான் மாதத்தில் - நகர ஏழைகளுக்கு இலவச அரிசி வினியோகம் செய்திடவும், ரமழான் 24ஆம் நாளன்று அந்நிகழ்ச்சியை நடத்திடவும் இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், அதற்கான ஏற்பாட்டுப் பணிகளைச் செய்வதற்கு, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில்,
ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன்,
ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ்,
ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா,
ஜனாப் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத்,
ஜனாப் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம்,
ஜனாப் எச்.எல்.அப்துல் பாஸித்
ஆகியோரைக் குழுவினராக நியமித்தும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கட்சியின் நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத் |