பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் இலவச முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காயல் நகரக் கிளை சார்பில் 07.07.2013 ஞாயிறு அன்று சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் (ஸ்காலர்ஷிப்) இலவச விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் முகாம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ப்ரி மெட்ரிக் (Pre Matric) & போஸ்ட் மெட்ரிக் (Post Matric) கல்வி உதவித் திட்டங்கள் மூலம் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் அரசால் வரவேற்கப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உதவும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காயல் நகரக் கிளை சமூக மேம்பாட்டுத் துறை (Community Development Department) சார்பில் இலவச முகாம் கீழ்க்கண்ட நிகழ்முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலம்:
07.07.2013 ஞாயிற்றுக் கிழமை - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
இடம்:
மஜ்லிஸுல் கௌது சங்கம், தாயிம் பள்ளி வளாகம், கே.டி.எம். தெரு
பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காயல் நகரக் கிளை சமூக மேம்பாட்டுத் துறை பொறுப்பாளர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
ப்ரி மெட்ரிக் (Pre Matric) வகுப்புகளுக்கான நிபந்தனைகள்:
(1) 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும்.
(2) பெற்றோர் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
(3) முந்தைய வகுப்பில் முழு ஆண்டுத் தேர்வில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (1ம் வகுப்பிற்கு விண்ணப்பிப்பவர்களைத் தவிர.)
(4) ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு நபர்களுக்கு மட்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பள்ளி/கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (I.O.B.) புதிதாக வங்கிக் கணக்கு துவங்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் (நகல் மட்டும்):
(அனைத்து ஆவணங்களின் நகல்களும் அட்டஸ்ட் செய்யப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.)
(1) முந்தைய வகுப்பில் முழு ஆண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ். (ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிப்பவர்களைத் தவிர.)
(2) வருமானச் சான்றிதழ் (2012-2013). (இச்சான்றிதழ் இல்லாதபட்சத்தில் அரசு இதற்கென வழங்கிய மாதிரிப் படிவத்தை 10 ரூபாய் பத்திரத்தில் கம்ப்யூட்டர் பிரிண்ட் எடுத்து, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.)
(3) சாதிச் சான்றிதழ். (இச்சான்றிதழ் இல்லாதபட்சத்தில் அரசு இதற்கென வழங்கிய மாதிரிப் படிவத்தை 10 ரூபாய் பத்திரத்தில் கம்ப்யூட்டர் பிரிண்ட் எடுத்து, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.)
(4) குடும்ப அட்டை (ரேஷன் கார்டு).
(5) வங்கிக் கணக்கு புத்தகம். (வங்கிக் கணக்கு எண் (Account No.) தெரியும் வகையில் நகல் எடுக்கவும்.)
(6) விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பள்ளியில் கொடுக்க வேண்டிய கடைசித் தேதி: 15.08.2013
போஸ்ட் மெட்ரிக் (Post Matric) வகுப்புகளுக்கான 11, 12ம் வகுப்பு, M.B.B.S., B.E., இன்னும் இதர பட்டப் படிப்புகள் (Degree Courses), பட்டயப் படிப்புகள் (Diploma Courses) படிப்பவர்கள் www.momoscholarship.gov.in என்ற இணையதளத்தில் 30.09.2013க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
குறிப்பு: தமிழக அரசுத் தேர்வாணையம் நடத்தும் அரசு வேலைகளுக்கான TNPSC (Group I, II, III, IV) தேர்வுகளுக்கான சிறப்பு ஆலோசனை (Special Counselling) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.S.அப்துல் ஹமீத் |