காயிதே மில்லத் நகரிலுள்ள அன்னை கதீஜா பெண்கள் மதரஸா எதிர்வரும் புனித ரமழானில் பல்வேறு மார்க்க நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இது குறித்து அதன் நிர்வாகம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:
ரமழான் மாதத்தில் தினமும் காலை மிகச் சரியாக 11 மணியிலிருந்து ளுஹர் ஜமாஅத் வரை மார்க்க சம்பந்தமான தொடர் சொற்பொழிவுகள், கேள்வி-பதில்கள் இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.
“முஸ்லிம் பெண்கள் அன்றும், இன்றும்!” என்ற தலைப்பில் முதல் பத்து நாட்களும், “இஸ்லாமியப் பார்வையில் குழந்தைகள்” என்ற தலைப்பில் இரண்டாவது பத்து நாட்களும், “அற்ப உலகம் முதல் மறுமை நாள் வரை” என்ற தலைப்பில் இறுதிப் பத்து நாட்களும் மார்க்க சொற்பொழிவுகள் நடைபெறும்.
தினமும் சரியாக இரவு 8.30 மணிக்கு இஷா தொழுகை நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரவுத் தொழுகை (தராவீஹ்) நடைபெறும். இரவுத் தொழுகை முடிந்தவுடன் அன்று தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களுக்கு விளக்கவுரை சுருக்கமாக நிகழ்த்தப்படும்.
இதனை மௌலவி M.M. முஹம்மது நூஹு அல்தாஃபி (அழைப்பாளர், ஜித்தா, சவூதி அரேபியா) அவர்கள் நடத்துகிறார்.
குறிப்பு : ஆண்களுக்கு தனி இடவசதி உண்டு.
இடம் : அன்னை கதீஜா மதரஸா வளாகம், 1-வது குறுக்குத் தெரு, காயிதே மில்லத் நகர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |