நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, குடியிருப்போர் அடையாள அட்டை முகாம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காயல்பட்டினம் உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இப்பணியை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, அந்நிறுவனத்தால் துணை ஒப்பந்தம் (Sub Contract) விடப்பட்டு, அதனடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினத்தில் 07 வார்டுகள் வரை முகாம் நடத்தப்பட்டு, தற்போது 08 மற்றும் 09ஆம் வார்டுகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிடக் கோரி, முகாம் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, முகாம் பணிகள் முடங்கியுள்ளது. அடுத்து முகாம் நடைபெறும் தேதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. |