அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நகரில் இந்த முகாம் - வார்ட் 1 முதல் 7 வரையிலும், வார்ட் 18 க்கிற்கும் - காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில், ஜூன் மாதம் 14ஆம் தேதி துவங்கி, நடைபெற்றது.
மேலும் தற்போது வார்ட் 8 மற்றும் வார்ட் 9 பணிகள் - அந்த வார்டு பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.
இம்முகாமில் விபரங்களைப் பதிவு செய்திட, 13ஆவது வார்டு பொதுமக்களுக்கு வழிகாட்டும் நோக்குடன், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீன் தலைமையில் தன்னார்வலர்கள், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில் வழிகாட்டுப் பணிகளைச் செய்தனர்.
தகவல் மற்றும் புகைப்படங்கள்;
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம். |