ரமழான் (1434) மாத அமாவாசை ஜூலை 8 திங்களன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 7:14 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் மதியம் 12:44 மணி.
ஜூலை 8 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:40 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:42. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 6 மணி நேரம். சூரியன் மறைந்து 2 நிமிடங்கள் பிறகு சந்திரன் மறைந்தாலும் அன்று
வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் காண இயலாது.
ஜூலை 8 அன்று தெற்கு பசிபிக் கடல் பகுதியில் வெறுங்கண்கள் கொண்டும், தென் அமெரிக்காவில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.
ஜூலை 9 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:40 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:26. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 30 மணி நேரம். அன்று காயல்பட்டணத்தில் - வானிலை தெளிவாக இருந்தால் - பிறையை
வெறுங்கண்கள் கொண்டு காணலாம்.
மேற்கு ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியாவின் தென் பகுதிகள், ஆப்ரிக்காவின் அநேக பகுதிகள், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவின் மத்திய பகுதிகள் வரை எளிதாகவும், கிழக்கு ஆஸ்திரேலியா, தென் கிழக்கு
ஆசியாவின் இதர பகுதிகளிலும், தென் இந்தியாவிலும், அரேபியா தீபகற்பத்திலும், ஆப்ரிக்காவின் வடபகுதியிலும், வட அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் - வானிலை சூழல் தெளிவாக இருந்தால் - வெறுங்கண்கள் கொண்டு - பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு ஜூலை 9 - ரமழான் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூலை 8 (அமாவாசை) அன்று ஸஃபான் 29 பூர்த்தி ஆகிறது. அன்று தெற்கு பசிபிக் கடல் பகுதியில் வெறுங்கண்கள் கொண்டும், தென்
அமெரிக்காவில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம். அவ்வாறு அப்பகுதிகளில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றால் அவர்களுக்கு ஜூலை 9 - ரமழான் 1 ஆகும். அல்லது ஜூலை 9 அன்று ஸஃபான் 30 பூர்த்தி செய்யப்பட்டு,
ஜூலை 10 அன்று - ரமழான் 1 ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஜூலை 8 அன்று ஸஃபான் 28 பூர்த்தி ஆகிறது. ஜூலை 8 அன்று காயல்பட்டணத்தில் பிறை தெரிய வாய்ப்பில்லை . ஆகவே - ஜூலை 9 அன்று ஸஃபான் 29 பூர்த்தி
ஆகிறது. அன்று காயல்பட்டணத்தில் - வானிலை தெளிவாக இருந்தால் - பிறையை வெறுங்கண்கள் கொண்டு காணலாம். ஜூலை 10 அன்று - ரமழான் 1 ஆகும். அன்று - மேகமூட்டமோ, அல்லது இதர காரணங்களுக்காக பிறை தென்படவில்லை
எனில், அவர்கள் ஜூலை 10 அன்று ஸஃபான் 30 பூர்த்தி செய்து, ஜூலை 11 அன்று ரமழானை துவக்குவர். |