பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக காயல்பட்டினம் வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கு, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் கட்சியினரால் வரவேற்பளிக்கப்பட்டது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஜூலை 07 ஞாயிற்றுக்கிழமையன்று (இன்று) காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெறும் - இஸ்லாமிய திருமண சட்ட விளக்கக் கருத்தரங்கிலும், இன்று மாலையில் ஏரல் நகரில் நடைபெறும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை விழிப்புணர்வு கருத்தரங்கிலும் பங்கேற்று உரையாற்றுவதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், மத்திய அரசின் மத்ரஸா கல்வி மேம்பாட்டுக் குழு உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர் நேற்றிரவு சென்னை எழும்பூரிலிருந்து செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் புறப்பட்டு, இன்று காலை 07.50 மணியளவில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை, கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் அதன் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், கவுரவ ஆலோசகர் ஹாஜி வாவு சித்தீக், நகர துணைச் செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, மாவட்ட நிர்வாகி ஹாஜி ஏ.கே.மஹ்மூத் சுலைமான், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயிதேமில்லத் பேரவை காயல்பட்டினம் நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், ஜெ.உமர், ரஹ்மத்துல்லாஹ், ஹாஃபிழ் மீரா லெப்பை ஃபத்தாஹ் உள்ளிட்ட கட்சியினர் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 12:00 pm/ 7-7-2013] |