புதிதாக இஸ்லாத்தை தழுவிய மாணவ-மாணவியரின் ஸஹர், இஃப்தார் செலவினங்களுக்கான அனுசரணை வேண்டி காயல்பட்டணம் தஃவா சென்டர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அன்புச் சகோதர, சகோதரியருக்கு அஸ்ஸலாமு அலைக்குமு வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ் ...
இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய இஸ்லாமிய உணர்வுடனும் சந்திக்கட்டுமாக!
இஸ்லாமிய மார்க்கத்தை தம் வாழ்வியல் நெறியாக்கி நமது காயல்பட்டணம் தஃவா சென்டரில் 120 நாட்கள் இஸ்லாமிய கல்வியை பயின்று வருகின்ற மாணவ-மாணவியருக்கு வருகிற ரமழான் மாத நோன்பு நோற்பு - ஸஹர், நோன்பு துறப்பு - இஃப்தார் செலவினங்களுக்கான அனுசரணை எதிர்பார்க்கப்படுகின்ற்து.
தம் வாழ்விலேயே இப்போதுதான் அவர்கள் முதல் ரமலான் நோன்பு நோற்கப் பழகுகின்றனர். அப்பேர்பட்ட சகோதர, சகோதரிகளை ஆர்வமூட்டும் வகையில் ஸஹர் - இஃப்தார் ஏற்பாடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டுமென நாங்கள் வழமை போல ஆவலுறுகிறோம்.
அந்த வகையில்,
ஒருநாள் ஸஹர் – நோன்பு நோற்பு வகைக்காக ரூ.3,000 தொகையும்,
ஒருநாள் இஃப்தார் – நோன்பு துறப்பு வகைக்காக ரூ.3,000 தொகையும்
செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
யார் ஒருவர் நோன்பு வைத்திடவும், நோன்பு திறந்திடவும் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் நோன்பின் கூலியை தருகின்றான்.
தொடர்புகொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள்:
சகோதரர். உமர் - +91 94883 05939
சகோதரர். ஆரிஸ் - +91 91504 48312
சகோதரி. ஆஸியா - +91 97881 31041
இவண்
இறைப்பணியில் சகோதர, சகோதரிகள்,
தஃவா சென்டர், காயல்பட்டணம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |