காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
நான்காமாண்டு போட்டி, ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 03.30 மணியளவில், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளிலிருந்து, அணிக்கு 3 பேர் வீதம் 147 அணிகளாக சுமார் 440 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.
பள்ளிகள் வாரியாக பங்குபெற்ற அணிகளின் எண்ணிக்கை:
எல்.கே.மேனிலைப்பள்ளி - 33
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி - 28
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி - 26
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி - 24
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி - 14
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி - 13
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி - 9
அணிகளின் மொத்த எண்ணிக்கை - 147
துவக்கமாக, முதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. கேள்விகளை போட்டி நடத்துநர் எல்.டி.இப்றாஹீம் ஆங்கிலத்தில் வாசித்து, தமிழாக்கமும் செய்து விளக்க, மாணவ-மாணவியர் அவற்றுக்கான விடைகளை எழுதினர்.
நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவரும் - இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான பி.ஏ.புகாரீ, எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், அதன் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், ரெட் ஸ்டார் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் புகாரீ ஆகியோர் மதிப்பீடு செய்து, இறுதிப்போட்டிக்குரிய 6 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.
பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 26 வினாக்களில், அதிக வினாக்களுக்கு விடையளித்த - எல்.கே.மேனிலைப்பள்ளியின் 4 அணிகள், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் 2 அணிகள் என மொத்தம் 6 அணிகள் இறுதிப்போட்டிக்குத் தேர்வாயின.
மாலை 05.00 மணிக்கு இறுதிப்போட்டி மேடையில் நடைபெற்றது. காயல்பட்டினம் நகரின் வினாடி-வினா போட்டி நடத்துநர் எல்.டி.இப்றாஹீம் போட்டியை நடத்தினார். கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவரும் - இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் பி.ஏ.புகாரீ ஆகியோர் மதிப்பீட்டாளர்களாகக் கடமையாற்றினர்.
5 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் மூன்று அணிகள் முதல் மூன்றிடங்களைப் பெற்றன.
முதலிடம்:
(1) எச்.எம்.என்.ஃபாஸில் அலாவுத்தீன்
(2) கே.எஸ்.ஏ.முஹம்மத் மீரா ஸாஹிப்
(3) எம்.ஏ.சி.செய்யித் முஹம்மத்
[பள்ளி: எல்.கே. மேனிலைப்பள்ளி]
இரண்டாமிடம்:
(1) எம்.எஸ்.செய்யித் அஹ்மத்
(2) எம்.எல்.ஹபீப் முஹம்மத்
(3) இசட்.எச்.ஸஈத் அலீ
[பள்ளி: எல்.கே. மேனிலைப்பள்ளி]
மூன்றாமிடம்:
(1) எஸ்.முஹம்மத் அப்துல்லாஹ்
(2) எம்.ஏ.இஜாஸ் நவ்ஃபல்
(3) எம்.ஏ.சி.முஹம்மத் ஷஃபீ
[பள்ளி: எல்.கே. மேனிலைப்பள்ளி]
இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இதர அணிகள்:
(1) ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ்
(2) கே.ஹம்ஜத் ஸதக்கத்துல்லாஹ்
(3) ஏ.அப்துல் அஹத்
[பள்ளி: சென்ட்ரல் மேனிலைப்பள்ளி]
(1) பி.செந்தில் செல்வம்
(2) பி.அப்துல் இக்ராம்
(3) எஸ்.ஷேக் தாஜுத்தீன்
[பள்ளி: சென்ட்ரல் மேனிலைப்பள்ளி]
(1) எம்.ஏ.அஹ்மத் ஸாலிஹ்
(2) ஜெ.எம்.அஹ்மத் நியாஸ்
(3) பி.விக்னேஷ்
[பள்ளி: எல்.கே. மேனிலைப்பள்ளி]
போட்டியில், 6 அணியினரும் விடையளிக்கத் தவறும் கேள்விகள் பார்வையாளர்களிடம் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு, இஸ்திரி பெட்டி, டார்ச் லைட், ஹேர் ட்ரிம்மர் உள்ளிட்ட அழகிய பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு 07.00 மணிக்கு பரிசளிப்பு விழா துவங்கியது. துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் காஜா முஹ்யித்தீன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றி வரும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த தமீமுல் அன்ஸாரீ பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவியருக்கு பொது அறிவு விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.
பின்னர், இந்த வினாடி-வினா போட்டியை நடத்திய எல்.டி.இப்றாஹீம், பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியர் தமீமுல் அன்ஸாரீ ஆகியோருக்கு கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. துவக்கமாக, இறுதிப்போட்டி வரை முன்னேறிய 3 அணிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அடுத்து, போட்டியில் மூன்றாமிடம் பெற்ற அணிக்கு ரூபாய் 2 ஆயிரம் பணப்பரிசும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, முதல் இரண்டிடங்களைப் பெற்ற அணியினருக்கு தனிப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், ரெட் ஸ்டார் சங்க தலைவர் ஹாஜி ஷேக் அப்துல் காதிர் ஆகியோர், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர், பதக்கங்கள் சான்றிதழ்கள் மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, இப்போட்டியில் முதலிடத்தைப் பெற்ற அணிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி தலைவர் காஜா முஹ்யித்தீன் அவற்றை வழங்கினார்.
பின்னர், முதலிடம் பெற்ற அணியைச் சேர்ந்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் தமீமுல் அன்ஸாரீ கோப்பையை வழங்க, முதலிடம் பெற்ற அணியினர் அதனைப் பெற்றுக்கொண்டனர்.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது.
இப்போட்டியில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கல்வி ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், மாணவ-மாணவியரின் பெற்றோர், பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, அலுவலக உதவியாளர் காதிர் சுலைமான், ரெட் ஸ்டார் சங்க நிர்வாகிகளான கட்டா மரைக்கா, புகாரீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 9:30 pm / 11-07-2013] |