வணிக நிறுவன திறப்பு விழாவையொட்டி ஏழைகளுக்கு இலவசமாக அரிசி வினியோகிக்கப்பட்டது.
காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலை - ஸ்டார் காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள ஹெச்.ஆர். பில்டர்ஸ் நிறுவனத்தின் செயல் அலுவலகம், தி டோட்டல் டைல்ஸ் ஷோரும் ஆகியவற்றின் திறப்பு விழா, இம்மாதம் 06ஆம் தேதி சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் நடைபெற்றது.
நகரப் பிரமுகர்களான ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் கய்யூம், ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஹாஜி கிழுறு முஹமமத் ஹல்லாஜி ஆகியோர் முன்னிலை வகிக்க, ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்வார் ஆகியோர் - தி டோட்டல் டைல்ஸ் ஷோரூமையும், எழுத்தாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது - ஹெச்.ஆர்.பில்டர்ஸ் நிறுவனத்தின் செயல் அலுவலகத்தையும் திறந்து வைத்தனர்.
இவ்விழாவையொட்டி, ஹெச்.ஆர்.பில்டர்ஸ் நிறுவனத்தின் ஏழைகள் நலத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்கீழ், காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி வட்டாரத்தைச் சேர்ந்த 25 ஏழைக் குடும்பத்தினருக்கு நோன்பு காலத்திற்குத் தேவையான சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
பயனாளிகள் பட்டிலின் படி முதல் 5 பயனாளிகளுக்கான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகரப் பிரமுகர்கள் வழங்க, இதர பயனாளிகளுக்கான உணவுப் பொருட்பொதிகள், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் வசம் ஒப்படைக்கப்பட்டது.
நிறுவன திறப்பு விழாவையொட்டி, TSF - 2013 என்ற பெயரில் குலுக்கல் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிறுவனத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய பொறியாளர்கள், மேலாளர்கள், அலுவலர்கள், கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் விருதுகளும் வழங்கப்பட்டன.
துஆ - ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |