பேட்டையிலுள்ள அரபிக் கல்லூரியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றுள்ளார். விபரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் பேட்டையில் - ரஹ்மானிய்யா பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ளது ஃபைளுர்ரஹ்மான் அரபிக்கல்லூரி. இக்கல்லூரியின் 31ஆவது பட்டமளிப்பு விழா, ஜூன் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், தாஜுஷ் ஷரீஅத் மவ்லவீ எஸ்.ஆர்.ஷம்ஸுல் ஹுதா ஹழ்ரத் நினைவரங்கில் நடைபெற்றது.
காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் - மர்ஹூம் ஓ.எல்.ஸிராஜுத்தீன் ஆகியோரின் கொள்ளுப் பேரனும், மர்ஹூம் ஹாஜி பிரபு இசட்.ஏ.மஹ்மூத் நெய்னா - ஹாஜி பிரபு இசட்.ஏ.நூஹ் நெய்னா ஆகியோரின் பேரனும், காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி பிரபு எம்.என்.ரியாஸுத்தீன் என்பவரின் மகனுமான பிரபு ஆர்.மஹ்மூத் மஃபாஸ் உட்பட 5 மாணவர்கள், இக்கல்லூரியில் திருமறை குர்ஆனை முறைப்படி முழுமையாக மனனம் செய்து முடித்து, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டச் சான்றிதழைப் பெற்றனர்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும், ஃபைளுர்ரஹ்மான் அரபிக் கல்லூரியின் முதல்வருமான ஷைகுல் ஹதீஸ் மவ்லவீ ஏ.இ.முஹம்மத் அப்துர்ரஹ்மான் ஹழ்ரத் இவ்விழாவிற்குத் தலைமையேற்று, ஸனது பெறும் மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் வாழ்த்துரை வழங்கிய இவ்விழாவில், காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் தலைவரும், நெல்லை மாவட்ட முஸ்லிம் நலச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப், ஹாஜி எம்.பி.ஏ.ஜமால் முஹம்மத், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ மற்றும் மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத், ஹாஜி பிரபு இசட்.ஏ.நூஹ் நெய்னா, ஹாஜி பிரபு எம்.என்.ஜெய்னுல் ஆப்தீன், ஹாஜி கே.எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், ‘அல்ஃபத்தாஹ்’ ஹாஜி என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, ஹாஜி எஸ்.இப்றாஹீம், ஏ.எல்.முஹம்மத் நிஜார் உள்ளிட்ட காயலர்களும், இதர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|