பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, அவர்களது வார விடுமுறைக் காலங்களில் மார்க்க அடிப்படைக் கல்வியைப் புகட்டுவதற்காகவும், திருமறை குர்ஆனை மனதிலேற்றிப் பாதுகாக்கும் ஹாஃபிழ்களை உருவாக்குவதற்காகவும், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வருகிறது மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு.
ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்களுக்கான நடப்பாண்டின் இறுதித் தேர்வுகள், ஜூன் 26, 27 தேதிகளில் நடைபெற்றது. 26ஆம் தேதியன்று தஜ்வீத் தேர்வு எழுத்து முறையில் நடைபெற்றது. 27ஆம் தேதியன்று திருக்குர்ஆன் மனனத் தேர்வு 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
நடைபெற்ற திருக்குர்ஆன் மனனத் தேர்வில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியல் வருமாறு:-
முதற்பிரிவு:
(1) எஸ்.எச்.அலீ ஃபஹத்
(2) என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ
(2) எம்.எல்.கிழுறு முஹம்மத் ஹல்லாஜ்
(3) எம்.எல்.ஸதக்கத்துல்லாஹ்
இரண்டாம் பிரிவு (அ):
(1) கே.எம்.எச்.அப்துல் வதூத்
(2) எஸ்.எச்.முஹம்மத் ஜுல்ஃபிகார் அலீ
(3) எஸ்.எச்.ஷெய்கு தாவூத்
இரண்டாம் பிரிவு (ஆ):
(1) எம்.ஏ.சுலைமான்
(1) எஸ்.எஸ்.ஃபாரூக் ஃபஹ்மீ
(2) பி.ஏ.முஹம்மத் ஸாலிஹ்
(2) என்.எம்.அபூபக்கர் லெப்பை ஸாஹிப்
(3) டி.ஏ.முஹம்மத் நுஅய்ம்
(3) எம்.ஒய்.தாஹா ரிழ்வான்
மூன்றாம் பிரிவு (அ):
(1) எஸ்.எம்.பி.முத்து அஹ்மத் அர்ஷத்
(2) எஸ்.ஏ.இன்ஸாஃப் சுலைமான்
(3) எம்.என்.முஹம்மத் உவைஸ்
மூன்றாம் பிரிவு (ஆ):
(1) ஏ.எஸ்.மஹ்மூத் ஸுஃப்யான்
(2) ஏ.எச்.அஹ்மத் ரம்ஸி
(3) எம்.யு.முஹம்மத் முஸ்தஃபிழ்
புதிய மாணவர்கள் பிரிவு:
(1) எம்.கே.எஸ்.முஹம்மத் அப்துல் ஜலீல்
(1) எஸ்.எம்.செய்யித் இப்றாஹீம்
(2) எம்.என்.முஹம்மத் ஹஸன்
(3) எஸ்.ஏ.கே.முஹம்மத் ஜெய்னுல் ஆப்தீன்
ஜூன் 27ஆம் தேதியன்று தேர்வுகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், மதியம் 01.30 மணியளவில் மாணவர்கள் அனைவருக்கும் களறி சாப்பாடு மதிய விருந்தாக வழங்கியுபசரிக்கப்பட்டது.
|