ரமழான் தலைப்பிறை, நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் ஆகியன குறித்து முடிவு செய்வதற்காக, காயல்பட்டினம் நகர உலமாக்களின் (மார்க்க அறிஞர்கள்) கூட்டுக் கூட்டம், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியில் ஓராண்டும், ஜாவியா அரபிக்கல்லூரியில் அடுத்த ஆண்டும் என மாறி மாறி நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டின் ரமழான் தலைப்பிறை குறித்து முடிவு செய்வதற்காக காயல்பட்டினம் உலமாக்களின் கூட்டுக் கூட்டம், காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி வளாகத்தில் 09.07.2013 செவ்வாய்க்கிழமை (இன்று) இரவு மஃரிப் தொழுகைக்குப் பின் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், தலைப்பிறையைப் பார்த்தது தொடர்பாக பல்வேறு இடங்களிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் உலமாக்கள் கலந்தாலோசித்து ரமழான் மாத துவக்க நாளை அறிவிக்கவுள்ளனர்.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, ஜாவியா அரபிக்கல்லூரி நிர்வாகம் செய்து வருகிறது. |