பிறை தென்படாததாலும், பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெறாததாலும், இன்று ஷஃபான் 30ஆம் நாள் என்றும், நாளை ஜூலை 10 புதன் பின்னேரம் வியாழன் இரவு ரமழான் முதல் நாளிரவு என்றும், ஜூலை 11ஆம் தேதி ரமழான் முதல் நாள் என்றும், ஜாவியா, மஹ்ழரா மற்றும் நகர உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கூட்டுக் கூட்டத்தில், சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
நடப்பாண்டு (ஹிஜ்ரீ 1434) ரமழான் துவக்க நாள் குறித்து முடிவு செய்வதற்கான - காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி, மஹ்ழரா அரபிக் கல்லூரி மற்றும் நகர உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கூட்டுக் கூட்டம், இன்றிரவு 07.00 மணியளவில், ஜாவியா அரபிக் கல்லூரி வளாகத்தில்> மவ்லவீ கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ கூட்டத்திற்குத் தலைமையில் நடைபெற்றது.
ரமழான் தலைப்பிறை தொடர்பாக இக்கூட்டத்தில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டது. காயல்பட்டினம் உட்பட - வரையறுக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தலைப்பிறை காணப்பட்ட தகவல் இரவு 08.45 மணி வரையிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எங்கிருந்தும் தலைப்பிறை கண்ட தகவல் பெறப்படவில்லை.
இது தவிர, பல மாவட்டங்களின் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கூட்டத்திலும், சென்னையிலுள்ள தமிழக அரசின் தலைமை காழீ அறிவிப்பிலும், பிறை தென்படவில்லை என்பதால் நாளை (ஜூலை 10 அன்று) ஷஃபான் 30ஆம் நாள் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் அடிப்படையில், ஜூலை 10 அன்று ஷஃபான் 30ஆம் நாள் என இக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அனைத்து உலமாக்கள் சார்பாக, மவ்லவீ எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ முறைப்படி அறிவிப்பு செய்தார்.
நாளை இரவு ரமழான் 01ஆம் நாள் துவக்கம் என்றும், வியாழக்கிழமை (ஜூலை 11ஆம் தேதி) ரமழான் முதல் நோன்பு என்றும் இக்கூட்டத்தில் மேலும் அறிவிப்பு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தின் காஷிஃபீ, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ,
ஜாவியா அரபிக் கல்லூரியின் மூத்த நிர்வாகி மவ்லவீ ஹாஃபிழ் கலீஃபத்துல் குலஃபா முத்துவாப்பா ஃபாஸீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ, மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அலீ ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் மாமுனா லெப்பை ஃபாஸீ, ஹாஜி ச.த.சதக்கத்துல்லாஹ், மக்தப் மக்தூமிய்யா முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ ஃபாஸீ, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ,
நகர உலமாக்களான மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஈனுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் லெப்பை பாக்கவீ, மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் தாவூதீ, மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ ஹாமித் லெப்பை ஃபாஸீ, மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் அலீ ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜாவியா வெளி வளாகத்தில், நகரப் பிரமுகர்களான ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் உள்ளிட்ட பொதுமக்கள், அதிகாரப்பூர்வமான தகவலை அறியக் காத்திருந்தனர்.
உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு வாசகம் வருமாறு:-
கலந்துகொண்ட உலமாக்களின் கைச்சான்றுப் பதிவுகள் வருமாறு:-
ரமழான் தலைப்பிறை அறிவிப்பின் அசைபட (வீடியோ) காட்சியைக் காண இங்கே சொடுக்குக!
இன்று மாலை 06.45 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் ஆவலுடன் ரமழான் தலைப்பிறையை எதிர்பார்த்தனர். மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் பிறை தென்படவில்லை.
[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டது @ 22:05 / 09.07.2013] |