காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில் அமைந்துள்ள - குருவித்துறைப் பள்ளி மஹல்லாவிற்குட்பட்ட நஹ்வி அப்பா பெண்கள் தைக்காவில், புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேல் தள (முதல் மாடி) திறப்பு விழா, இம்மாதம் 05ஆம் தேதி வெள்ளிக்கிழமையும், பெண்கள் அமர்வு மறுநாள் - 06ஆம் தேதி சனிக்கிழமையும் நடைபெற்றன.
இருநாள் நிகழ்ச்சிகள் குறித்து, தைக்கா நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில் அமைந்துள்ள - குருவித்துறைப் பள்ளி மஹல்லாவிற்குட்பட்ட நஹ்வி அப்பா பெண்கள் தைக்காவில், புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேல் தள (முதல் மாடி) திறப்பு விழா, இம்மாதம் 05ஆம் தேதி வெள்ளி பின்னேரம் சனி இரவும், பெண்கள் அமர்வு மறுநாள் - 06ஆம் தேதி சனிக்கிழமை மாலையிலும் நடைபெற்றன.
மேல்தள புதிய கட்டிட திறப்பு விழா:
வெள்ளிக்கிழமை பின்னேரம் சனிக்கிழமை இரவு 07.00 மணிக்கு தைக்கா மேல் தள புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. கலந்துகொண்டோர் அனைவரின் தக்பீர் முழக்கத்தினிடையே அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் மேல்தள புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்க, ஸலாம் பைத் துவக்கமாகப் பாடப்பட்டது.
திக்ர் மஜ்லிஸ்:
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தலைமையில், ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
அரங்க நிகழ்ச்சி:
அதன் தொடர்ச்சியாக மேடை நிகழ்ச்சிகள் துவங்கின. ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத் நிகழ்ச்சிக்குது் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு மாணவர் என்.எம்.இசட்.அஹ்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ வரவேற்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, தைக்காவின் சரித்திரத்தை உள்ளடக்கி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், சென்னை புகாரிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஸக்காஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் அங்கம் வகித்த அனைவருக்கும், மேல்தள கட்மானப் பணிக்கு நிதியாதாரத்தைத் திரட்டுவதில் முன்னிலை வகித்த எம்.எல்.அப்துர்ரஷீத் (அவ்லியா) ஆகியோருக்கு, ஹாஜி எம்.ஐ.ஷெய்கு தாவூத், ஹாஜி ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா, ஹாஜி எஸ்.எச்.சூப்பர் இப்றாஹீம் ஆகியோர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நன்றி கூற, காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.மவ்லானா ஸாஹிப் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
திறப்பு விழா நிகழ்ச்சிகள் அனைத்திலும், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பெண்கள் நிகழ்ச்சி:
மறுநாள் 06ஆம் தேதி சனிக்கிழமையன்று பெண்கள் பங்கேற்ற ஸலவாத்துன் நாரிய்யா மஜ்லிஸ் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியை பி.ஏ.ஆயிஷா சித்தீக்கா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
அடுத்து, தைக்காவிற்கு நிலம் வழங்கியோர் மற்றும் தைக்கா பற்றிய அறிமுகவுரையை நஹ்வீ எஸ்.ஐ.முஹ்யித்தீன் ஃபாத்திமா வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்:
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் துஆ பிரார்த்தனை செய்ததுடன், வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், தைக்காவிற்கு நிலம் வக்ஃப் செய்த ஹாஜ்ஜா நஹ்வீ எஸ்.எஸ்.உம்மு ஹபீபா மற்றும் சிறப்பு விருந்தினரான நகர்மன்றத் தலைவர் ஆகியோருக்கும், தைக்காவின் தலைவர் ஹாஜ்ஜா நஹ்வீ எஸ்.ஏ.செய்யித் ராபியா, துணைத்தலைவர் ஹாஜ்ஜா நஹ்வீ எஸ்.எஸ்.ஜெமீலா பீவி, தைக்காவின் மேல்தள புதிய கட்டிடம் உருவாவதற்கு முனைப்புடன் பணியாற்றிய ஹாஜ்ஜா வி.எஸ்.டி.ருக்கையா பீவி, ஹாஜ்ஜா எம்.எஸ்.கத்ருன்னிஸா, ஹாஜ்ஜா எம்.எஸ்.முத்து ஹலீமா ஆகியோருக்கும், தைக்கா அமைந்துள்ள 08ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்க்கும் தைக்கா நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
நிறைவில், சிறப்பு விருந்தினருடன் அனைவரும் முஸாஃபஹா செய்ய, அதனைத் தொடர்ந்து ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இந்த தைக்காவின் தரைதளம், முதல் தளம் இரண்டிலுமாக மொத்தம் 80 பெண்கள் தொழுகையை நிறைவேற்ற இடவசதி அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, நஹ்வி அப்பா தைக்கா நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
ஹாஃபிழ் A.முஹம்மத் |