சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் - நலிந்தோருக்கான அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 73 குடும்பத்தினருக்கு, நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, அத்தியாவசிய சமையல் பொருட்பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
ஒரு பயனாளிக்கு ரூபாய் 2 ஆயிரத்து 600 தொகை மதிப்பில் சமையல் பொருட்களை உள்ளடக்கி, மொத்தம் 73 பயனாளிகளுக்கு, ரூபாய் 1 லட்சத்து 89 ஆயிரத்து 800 தொகை மதிப்பில் சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரிணைந்து, பயனாளிகளை அவர்களின் இல்லம் தேடிச் சென்று நேரடியாக சமையல் பொருட்களை வழங்கினர்.
வழங்கப்பட்ட பொருட்களின் விபரப் பட்டியல் வருமாறு:-
|