இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் 2013-17 காலகட்ட தனியார் ஹஜ் நிறுவனங்கள் குறித்த திட்டத்திற்கு - இந்திய உச்சநீதிமன்றம், மார்ச் 16 அன்று ஒப்புதல் வழங்கியது. அதனை தொடர்ந்து - இந்திய அரசு, ஏப்ரல் 23 தேதிய செய்தி குறிப்பு மூலம், தனியார் ஹஜ் நிறுவனங்கள் குறித்த 2013-17 ஆம் காலகட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு, 2013 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்களை கோரியது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஹஜ் பிரிவு - இறுதி நாளான மே 13 தேதி வரை, தனியார் ஹஜ் நிறுவனங்களிடம் இருந்து, ஒன்றாம் பிரிவுக்கு 278 விண்ணப்பங்களும், இரண்டாம் பிரிவுக்கு 585 பிரிவுகளும் பெற்றது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் - டெண்டர் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தணிக்கை நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் இறுதியில் ஒன்றாம் பிரிவில் - 177 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இரண்டாம் பிரிவில் 239 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
தகுதி இல்லாத நிறுவனங்களாக முடிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடம் விளக்கங்கள் கோரி, விளக்கங்கள் திருப்தியாக இருக்கும் பட்சத்தில் - அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் போது, அந்நிறுவனங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, சவுதி அரசாங்கமும் - ஒவ்வொரு தனியார் நிறுவனத்திற்கும் வழங்கப்படும் இடங்களின் குறைந்தப்பட்ச எண்ணிக்கையை - 150 இல் இருந்து 50 ஆக குறைத்திட சம்மதம் தெரிவித்துள்ளது.
ஒன்றாம் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 177 தனியார் நிறுவனங்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த இடம் 10,200.
இரண்டாம் பிரிவில் தகுதியான 239 நிறுவனங்களில் - குலுக்கல் அடிப்படையில் 88 நிறுவனங்களுக்கு, தலா 50 இடங்கள் என - 4400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரிவு 1 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்கள் விபரம் வருமாறு ...
பிரிவு 2 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்கள் விபரம் வருமாறு ...
|