காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் - புதுப்பிக்கப்பட்ட டென்னிஸ் மைதானம் துவக்க விழா இம்மாதம் 07ஆம் தெதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணிக்கு, மைதானம் அமைந்துள்ள ஈக்கியப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
ஹாஜி எஸ்.எம்.கபீர், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.), எஸ்.எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் (சாபு) உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு, ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிகளை, ஹாஜி ஏ.எல்.முஹம்மத் நிஜார் நெறிப்படுத்தினார். கிராஅத்தைத் தொடர்ந்து, இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வரவேற்புரையாற்றினார்.
பின்னர், ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத், ஹாஜி எம்.என்.எல்.சுலைமான் லெப்பை, ஹாஜி பி.எம்.என்.ரியாஸுத்தீன், ஹாஜி என்.டி.ஷெய்கு சுலைமான், ஹாஜி இசட்.ஏ.சுல்தான் லெப்பை, ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் பிலாலீ, நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எம்.எச்.ஸாலிஹ், எம்.எச்.புகாரீ, ஹாஜி என்.டி.ஷெய்கு மொகுதூம், ஹாஜி எம்.எச்.முஹம்மத் நூஹ் இம்ரான் ஆகியோர் அனுசரணையில், டென்னிஸ் மட்டை மற்றும் பந்துகள், வீரர்களுக்கு வழங்கப்பட்டன.
ஹாஜி கானாப்பா எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், புதிய மைதானத்தில் டென்னிஸ் விளையாட்டைத் துவக்கி வைத்தார்.
நன்றியுரை - துஆவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், நகரப் பிரமுகர்கள் மற்றும் டென்னிஸ் விளையாட்டார்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்கள்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக
ஃபாஸில் ஸ்டூடியோ |