தமிழகத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகங்களில் வசூல் செய்யப்படும் பதிவு கட்டணங்களில் (STAMP DUTY) ஒரு பங்கு - உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு - அக்டோபர் 2012 - டிசம்பர் 2012 வரையிலான மூன்று மாத காலகட்டத்திற்கு - 2,39,871 ரூபாய், நகராட்சி நிர்வாகத்துறை மூலம் - தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்த தொகை - காயல்பட்டினம் நகராட்சியின் State Bank of India வங்கி தூத்துக்குடி கிளை கணக்கிற்கு (எண் 10852663985) அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே IAS - மே 24 அன்று வெளியிட்டார்.
பத்திர மதிப்பில் 2% (Transfer Duty) - கூடுதல் தொகையாக (Surcharge) தமிழகம் முழுவதும் வசூல் செய்யப்படுகிறது. அதில் 50% தொகை உள்ளாட்சி மன்றங்களுக்கும், 50% தொகை - TAMILNADU URBAN ROAD INFRASTRUCTURE FUND (TURIF) - வகைக்கும் ஒதுக்கப்படுகிறது.
அக்டோபர் 2011 - டிசம்பர் 2011 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 2012 - மார்ச் 2012 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2012 - ஜூன் 2012 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 2012 - செப்டம்பர் 2012 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
அது சரி ....நம் நகர் மன்றத்துக்கு நமது தமிழக அரசால் வரகூடிய இவ்வளவு பெரிய தொகையான ....இந்த பணம் எல்லாம் எங்கே சார் ?? போய் சேருகிறது ....என்று தான் நமது ஊர் பொது மக்களாகிய நம் யாவர்களுக்கும் சுத்தமாகவே தெரிவது இல்லை.....நல்ல திட்டங்கள் தான் ஒன்றுமே நம் ஊர் மக்களுக்கு போய் சேர்வது இல்லையே .... இந்த பணம் நம் மக்களுக்கு சேர்ந்தால் நமக்கு மன நிம்மதி தான் .......... தயவு செய்து நம் ஊர் நகர் மன்றத்தை ஒற்றுமையுடன் நடத்தி .....மக்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று தான் நாம் யாவர்களும் ...நம் நகர் மன்ற உறுப்பினர்களையும் / நம் தலைவி அவர்களையும் கேட்டு கொள்கிறோம் ......
நமது ஊர் மக்களின் வரி பணம் வீணாவதை ....தவிருங்கள் .....மக்களை தாங்கள் யாவர்களும் கொஞ்சம் நினைத்து பாருங்கள்...........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross