தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காயல்பட்டினத்தில் பல்துறை மருத்துவ பரிசோதனை இலவச முகாம்கள், இம்மாதம் 05ஆம் தேதியன்று சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலும், 06ஆம் தேதியன்று எல்.கே.மேனிலைப்பள்ளியிலும், 08ஆம் தேதியன்று சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலும் நடைபெற்றன.
கண் மருத்துவம், அறுவை சிகிச்சை, இதய நோய், தோல் நோய், காது - மூக்கு - தொண்டை நோய், குழந்தைகள் நலன், மகப்பேறு, பொது மருத்துவம் என பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
திருப்பதி, ராகேஷ் ஃபர்னான்டோ, டி.எஸ்.மகாதேவன், தாமஸ் கிங்ஸ்லி, ஷர்மிலா, மணி சூரிய குமார். ராஜ்கமல் பாண்டியன், பி.நரேஷ், கிருஷ்ணா, எஸ்.ப்ரார்த்தனா, கே.அகல்யா, ஜெ.ஆக்னஸ் லலிதா, ராணி டப்ஸ், எஸ்.கண்ணன் குட்டி, பமிலா உள்ளிட்ட பல்துறை மருத்துவ நிபுணர்கள் இம்முகாம்களில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.
பொதுமக்களின் உடல் எடை, உயரம், இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட சோதனைகளும் அனைவருக்கும் செய்யப்பட்டது.
நிறைவில், அவர்களின் பரிசோதனை முடிவுகள் பதிவு செய்யப்பட்டு, தேவையான மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
இம்முகாம்களை, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் உமா, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார். சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்.மதன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இம்முகாம்களில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |