பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு இணையதளம் மூலம் மருத்துவ உதவிகளை சேகரித்து வழங்கி வரும் “மைக்ரோ காயல்" அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள ரமழான் வேண்டுகோள் பின்வருமாறு:-
அன்பிற்கும், பாசத்திற்குரிய காயல் வாசிகளே ! அஸ்ஸலாமு அலைக்கும்!! மைக்ரோ காயலின் இதயம் கனிந்த புனித ரமழான் நல்வாழ்த்துக்கள்!
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எதிர்பாராத மருத்துவ செலவினங்களினால் அல்லல்படும் ஏழை எளிய நமதூர் மக்களுக்கு மருத்துவ உதவிகளை மைக்ரோ காயல் அமைப்பு சேகரித்து வழங்கி வருகின்றது. அத்துடன் நம் மக்களிடையே "மாற்றுமுறை" மருத்துவம் பற்றிய தகவல் பரிமாற்றத்தை விழிப்புணர்வை இணைய தளங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் ஏற்படுத்தி வருவதை நாம் யாவரும் அறிந்ததே !
எங்கள் சேவைகளில் சில உங்கள் பார்வைக்கு
• மைக்ரோகாயல் மூலம் செய்த மொத்த உதவி தொகை: ரூபாய் 9,04,300
• பாலகர் முதல் முதியவர் வரை இத்திட்டத்தின் மூலம் சுமார் 34 பேர் பயனடைந்துள்ளனர்
• கடந்த ரமழானில் எமர்ஜென்சி மற்றும் குழந்தை நல நிதிகள் (fund) மூலம் திரட்ட பட்ட தொகை: ரூபாய் 1,71,900. இதன் மூலம் 17 பேர் பயனடைந்துள்ளனர்.
• எலும்பு முறிவு, கான்செர் நோய், கிட்னி பாதிப்பு என பலதரப்பட்ட நோய்களுக்கான உதவிகள் வழங்கப்படுள்ளன
• நோயால் அவதிபடும் நோயாளிகளை இவ்வுதவி தக்க நேரத்தில் முழுமையாக சென்றடைந்துள்ளது
• நோயாளிகளின் மருத்துவ செலவை குறைப்பதற்காக, விலைக்குறைந்த அதேநேரத்தில் தரமான மருத்துவத்தை பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது
• உதவி பெறுபவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களை பற்றி சுய விபரங்கள் மறைக்கப்பட்டு மருத்துவ உதவிகள் சேகரித்து வழங்கப்பட்டு வருகின்றது
• வெளியே சொல்ல முடியாத கஷ்ட சூழ்நிலையில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரையும் இவ்வுதவி சென்றடைந்துள்ளது
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் பேரருளாலும் நம் காயல் நல்லுள்ளங்களின் பேராதரவாலும் மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கும் மைக்ரோ காயல் அமைப்பிற்கு சென்ற வருடம் போல் இவ்வருடமும் உங்கள் ஜகாத், சதக்கா நன்கொடைகளை மைக்ரோ காயல் அமைப்புக்கு அதிகம் அதிகமாக வழங்கி, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக ஆமீன்.
இவ்வருடம் ஜகாத் மற்றும் சதக்கா மூலம் திரட்டப்படும் நிதிகளை, அவசரத்தேவை மற்றும் குழந்தை பள்ளிமாணவர்கள் மருத்துவ தேவைகளுக்காக ஒதுக்கி, அவர்களுக்கு 'காயல் மெடிக்கல் கார்ட்' (அதாவது இந்த அடையாள அட்டையை கொண்டு நமதூர் மருத்துவ மனைகளில் இலவச மருத்துவத்தை பெறுதல்) ஒன்றையும் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்பதனையும் மிக ஆவலுடன் அறியத்தருகின்றோம்.
எல்லாம் வல்ல இறைவன் இப்புனித மிகு ரமளானில் உங்களுடைய அனைத்து துஆக்களையும் அங்கிகரித்து நோய் நோடியற்ற வாழ்வையும் வியாபாரத்தில் அபிவிருத்தியையும் தருவானாக ஆமீன் !
தங்கள் ஜக்காத்/சதக்கா நன்கொடைகளை எமது இணையதளம் மூலம் http://microkayal.com/UserLogin.aspx?page=register என்ற இணைப்பைச் சொடுக்கி ரெஜிஸ்தர் செய்து வழங்கலாம் அல்லது கீழ்கண்ட வங்கிக் கணக்கு வழியாக செலுத்தலாம் அல்லது எங்கள் அலுவலகத்தில் சகோ. மீரா சாஹிப் அவர்களிடம் நேரடியாக வழங்கலாம் அல்லது உங்கள் பகுதியில் வசிக்கும் எங்கள் அமைப்பின்ஒருங்கிணைப்பாளிடம் (http://microkayal.com/team.aspx) வழங்கலாம்.
வங்கி கணக்கு விபரம் :
வங்கி எண் : 615305021044
Acct Name: RIDA FOUNDATION
Bank: ICICI Kayal Patnam Branch
அலுவலக விலாசம்:
சகோ. மீரா சாஹிப்
(மைக்ரோ காயல் அலுவலக மேலாளர்)
B/2 முதல் மாடி, #3 கஸ்டம்ஸ் ரோடு (கடைப்பள்ளி எதிரில்)
காயல்பட்டணம் – 628204.
தொலைப்பேசி : +91 9345146229 / 8148605641
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை முஹம்மத் முஹிய்யதீன்,
சர்வதேச ஒருங்கிணைப்பாளர், மைக்ரோகாயல்.
www.microkayal.com |