தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில், ஏராளமான காயலர்கள் மாணிக்க வணிகம் செய்து வருகின்றனர். இவர்கள், நகர்நலப் பணிகளாற்றுவதற்காக, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) என்ற பெயரில் அமைப்பை நிறுவி, அதில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இங்குள்ள பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தில், காயல்பட்டினம், கீழக்கரை, நீடூர், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அங்கத்தினராக உள்ளனர். இச்சங்கத்தின் சார்பில், பிரம்மாண்டமான பள்ளிவாசல் கட்டி நிர்வகிக்கப்பட்டு வருவதுடன், சங்க அலுவலகமும் அங்கேயே இயங்கி வருகிறது.
ஆண்டுதோறும் ரமழான் மாதத்தை முன்னிட்டு இப்பள்ளியில் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் விமரிசையாக செய்யப்படுவது வழமை. அதுபோல, ரமழான் கடைசி பத்து நாட்களில் கியாமுல் லைல் - இரவு விசேஷ தொழுகை நடத்தப்பட்டு, முழு குர்ஆனும் பல முறை ஓதி முடிக்கப்படுகிறது.
நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இஃப்தார் - நிகழ்ச்சியொன்றில், அனைவரோடும் காயலர்களும் இணைந்து பங்கேற்ற காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், பேரீத்தம்பழம், தண்ணீர், கடற்பாசி, கறி கஞ்சி, வடை வகைகள், கீரை வகைகள் என பலவகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டு வருகிறது.
படங்கள்:
கம்பல்பக்ஷ் S.A.அஹ்மத் இர்ஃபான் |