Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:30:33 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11265
#KOTW11265
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 13, 2013
மறைந்த முன்னாள் இமாம் உடல் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம்! திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3165 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாமும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் துணைத்தலைவருமான ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர், இம்மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமையன்று இரவு 11.15 மணியளவில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் - 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணியளவில், குருவித்துறைப் பள்ளிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது.











மவ்லவீ ஊண்டி எம்.எம்.செய்யித் முஹம்மத் பாக்கவீ ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார். அவரது சகோதரர் மகன் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ துஆ பிரார்த்தனை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நல்லடக்க நிகழ்வில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by SMM Seyed Abu Thahir (Kuwait) [13 July 2013]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 28637

Innaa lillahi wa inna ilaihi Raajioon..

May Allah accepts all his good deeds, forgive his sins and bless him and us Jennath Al Firdous, Aameen..

Hearty condolences to my brothers Yahya & Abu Thahir and to all relative members..

Salaam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இதயம் கவர்ந்த பெரியவர் ,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [13 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28640

குருவித்துறை பள்ளியின் முன்னாள் பேஷ் இமாமும், மஜ்லிஜுல் புகாரிஷ் ஷரீபு சபையின் துணைத்தலைவருமான சொளுக்கார் தெருவைச் சார்ந்த அல்ஹாஜ். டி.எம்.கே. சுல்தான் அப்துல் காதிர் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

இந்த இறைவசனத்தை மிஞ்சிய ஆறுதல் எதுவும் இல்லை எனலாம். எனவே அல்லாஹ்வுக்காக சபூர் செய்து கொள்வோம். தன் முழு வாழ்க்கையையும் இறைபணிக்காக அர்ப்பணித்த ஒரு நல்ல மனிதர். எல்லோரோடும் மிகவும் அன்பாகவும், கண்ணியமாகவும் நடப்பார்கள்.

குருவித்துறை பள்ளியின் இமாமாகவும் மஜ்லிசுல் புஹாரிஷரீபு, மதரஸா ஹாமிதிய்யா, ஆகியவற்றின் நிர்வாகியாக திகழ்ந்தவர்கள். முஹல்லாவில் பல உலமாக்கள், ஹாபிழ்கள் உருவாக காரணமானவர்கள்.

இப்படி எண்ணற்ற சிறப்புகளை கொண்ட பெருமகனாரை இழந்து இருக்கிறோம்.

வல்ல ரஹ்மான் அவர்களின் கபுரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி வைத்து ஒளிமயமாக்கி வைப்பானாக! ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [14 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28649

வல்ல இறைவன் இமாம் அவர்களின் மறுமையை அழகாகி வைத்து ஜனதுல் பிர்தௌஸ் என்னும் சுவனத்தில் வைக்க போதுமானவன் இறைப் பணியை முறையாய் செய்த மாமனிதர் குருவித்துறை குருவி ஒன்று இறை இடத்தில் பயணம் அமரர்கள் அமரும் இடத்தில் அல்லாஹ் இடம் கொடுபான்னாக ஆமீன் . இமாம் அவர்களின் சாயல் மர்ஹும் தோல்சாபு அல்ஹாஜ் அகமது சுலைமான் அவர்களை போன்று உள்ளது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [14 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28654

ஒரு மரண செய்தி வந்தால், அந்த செய்திக்கு பதியப்படும் கருத்துக்களை நான் உன்னிப்பாக படித்து பார்ப்பேன். உடனே இந்த ஹதீஸ் தான் என் மனதில் ஓடும்.

----------------------------------------------

ஹதீஸ் எண் 1367. அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது" என்றார்கள்.

மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள்.

உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்" எனக் கூறினார்கள்.

------------------------------------------------------

இவர்களின் மரண செய்திக்கு எவ்வளவு அருமையான கருத்து பதிவுகள்.

இன்ஷா அல்லாஹ், மறைந்த முன்னாள் இமாம் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் சுவனத்தை அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Inna lillahi wa inna ilaihi raajioon
posted by Ibrahim (chennai) [15 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28674

The service he had done to the society was un imaginable.Insha allah he wil be in jannah for sure.. heartly condolence to ma frnd haaji and al of his relations


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மனமார்ந்த நன்றிகள்! மறவாது துஆ செய்யுங்கள்!!
posted by T.S.A.Abu Thahir (Kayalpatnam) [18 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28743

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எங்கள் அன்புத் தந்தை - மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் நான்காவது வழித்தோன்றல் - பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் T.M.K.சுல்தான் அப்துல் காதிர் அவர்கள், கடந்த 11.07.2013 அன்று இரவு 11.15 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா மறுநாள் 12.07.2013 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூம் அவர்களின் மறைவை முன்னிட்டு, இரங்கல் தெரிவித்தும், துஆ இறைஞ்சியும் - நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதள செய்திகள் வாயிலாகவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஊறு விளைவித்திருந்தால், பெருமனது கொண்டு அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, +91 98415 67213 (T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ) என்ற கைபேசி எண்ணுக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ
(மர்ஹூம் அவர்களின் மக்கள்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved