காயல்பட்டினம் 01ஆவது வார்டுக்குட்பட்ட கடையக்குடி மற்றும் அருணாச்சலபுரம் பகுதிகளில், குடிநீர் வினியோகம் சரியாக நடைபெறுவதில்லை என்று கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரிடம் முறையிட்டனர்.
அதனடிப்படையில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், ஊழியர் கண்ணன் ஆகியோரை அப்பகுதி மக்களிடம் நேரில் அழைத்துச் சென்று விசாரித்தார்.
சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டிருந்த இந்நிகழ்வில், குடிநீர் வினியோகத்திலுள்ள குறைபாடுகள் குறித்த அவர்களின் முறையீடுகளுக்கு, குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் தேவையான விளக்கங்களை அளித்தார்.
சரிசெய்யப்பட வேண்டிய குறைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் அவை சரிசெய்யப்படும் என்றும், நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் அவர் பொதுமக்களிடம் உறுதியளித்தார். |