வழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினம் எல்.எஃப். ரோட்டில் அமைந்துள்ள செய்கு ஹுஸைன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையளித்தோருக்கு நன்றி தெரிவித்து, அப்பள்ளியின் பொருளாளர் கே.எம்.இஸ்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
எமது செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சி செலவினங்களுக்காக, 5 நாட்களுக்கு மட்டும் அனுசரணை கோரப்பட்டு, நேற்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இச்செய்தி வெளியிடப்பட்ட அன்றே - தேவையான 5 நாட்களுக்கும், நமதூரின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்வத்துடன் முன்வந்து சகோதரர்கள் அனுசரணையளித்துள்ளனர்.
இதன்மூலம், நடப்பாண்டின் அனைத்து நாட்களுக்கும் தேவையான அனுசரணை முழுமையாகப் பெறப்பட்டுவிட்டது என்பதை மனமகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
புனிதமான ஒரு காரியத்திற்காக, ஆர்வத்துடன் முன்வந்து அனுசரணையளித்ததன் மூலம் எமது நிர்வாகச் சுமையைக் குறைத்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், அவர்களின் வாழ்விலும், தொழிலிலும் வல்ல அல்லாஹ் நிறைவான அபிவிருத்தியை வழங்கியருள்வானாக.. அவர்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் இம்மை, மறுமையில் முழுமையான வெற்றியைத் தந்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு செய்கு ஹுஸைன் பள்ளி பொருளாளர் கே.எம்.இஸ்மத் கேட்டுக்கொண்டுள்ளார். |