சீனாவின் தென்கோடியில் உள்ள நகரம் சென்ஜன். ஹாங்காங் நகரை எதிர்நோக்கி இருக்கும் சென்ஜன் ஆற்றுக்கு வட திசையில் உள்ளதால், இந்நகருக்கு சென்ஜன் என்ற பெயர் வந்தது. 1970கள் வரை பாவ்ன் கிராமமாக இருந்து, 1979ஆம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கையின் பயனாக பெருநகரமாக இது மாறியது.
தற்போது இந்நகரில் சுமார் 1,00,000 முஸ்லிம்கள் வாழ்வதாக புள்ளி விபரம் கூறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து தொழில் நிமிர்த்தமாக குடியேறியுள்ள முஸ்லிம்களும் அடங்குவர். இந்நகரில் காயலர்கள் பலரும் உள்ளனர்.
இந்நகரின் ஒரே பள்ளிவாசல் என கூறப்படும் ஷாங் மேலின் பள்ளியில் 13.07.2013 நடந்த இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காயலர்கள் சிலர் கலந்துகொண்ட காட்சிகள்:-
14.07.2013 இன்று சீனா சென்ஜனில் காயலர் ருக்குனுதீன் சாஹிப் ஆலிம் அவர்கள் வீட்டில் இஃப்தார் நிகழ்ச்சி அனைவருக்கும், பேரீத்தம்பழம், தண்ணீர், கடற்பாசி, கறி கஞ்சி, வடை வகைகள், கீரை வகைகள் என பலவகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. காட்சிகள் வருமாறு:-
தகவல் & படங்கள்:
காதர் சாமுனா
சென்ஜன் - சீனா |