கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில், இம்மாதம் 18ஆம் தேதியன்று, இஃப்தார் - நோன்பு துறப்பு ஒன்றுகூடலுடன், பொதுக்குழுக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, அம்மன்ற நிர்வாகத்தின் சார்பில் - அதன் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் இன்று வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கத்தர் வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், வரும் 18.07.2013 வியாழக்கிழமை பின்னேரம், மாலை 05.00 மணியளவில், நமது மன்றத்தின் சார்பில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன், உறுப்பினர் பொதுக்குழுக் கூட்டம், SOFITEL HOTEL எதிரிலுள்ள GOLDEN FORK HOTELஇல் இன்ஷாஅல்லாஹ் நடத்தப்படவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், கத்தர் நாட்டிற்கு புதிதாக வந்திருக்கும் காயலர்கள் உள்ளிட்ட அனைத்து காயலர்களும், இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, தங்கள் குடும்பத்தினருடன் குறித்த நேரத்தில் இஃப்தார் நிகழ்ச்சியிலும், பொதுக்குழுக் கூட்டத்திலும் கலந்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கருணையுள்ள ரஹ்மான் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால், நமது பாவங்களை மன்னித்து ஈருலக நன்மைகளைத் தந்தருள்வானாக ஆமீன்.
குறிப்பு: அனைவருக்கும் சிறப்பான ஏற்பாடுகளை நிறைவாகச் செய்திடும் பொருட்டு, இந்நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் உறுப்பினர்கள்,
மன்ற துணைத்தலைவர் ஜனாப் முஹம்மத் யூனுஸ் அவர்களுக்கோ
(கைபேசி எண்: 5540 2614)
அல்லது
எனக்கோ (‘கவிமகன்’ காதர்)
(கைபேசி எண்: 6627 3131)
இம்மாதம் 17ஆம் தேதிக்குள் (நாளைக்குள்) தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதி செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கத்தர் காயல் நல மன்றம் சார்பாக,
S.K.ஸாலிஹ்
(உள்ளூர் பிரதிநிதி) |