1. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[16 July 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28696
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருகின்றதே..!!
** முதல் படத்தில் இருப்பவர் என்னுடைய கிளாஸ் மேட், அலி.
** மூன்றாம் படம் எடுத்தது எங்கே,? ஏதோ கலவர பூமியில் எடுத்த மாதிரி உள்ளது?
** நான்காம் படத்தில் தூக்க முடியாமல் ஆப்பிள் தூக்கை சுமந்து வரும் சிறுவனை பார்த்ததும், என் பால்ய நண்பனுடன் கஞ்சி வாங்க சென்ற நினைவு வருகின்றது..
- நாங்கள் இருவரும் ஒன்றாக கஞ்சி வாங்க செல்லுவோம்.
ஒரு நாள் நான் தூக்கில் தண்ணீரை நிரப்பி, மூடியை திறந்து, ஸ்பீட் ஆக, ராட்டினம் சுத்துவது போல, மேலும் கீழும் சுத்தி சுத்தி, ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே விழாமல் செய்தேன்.
இதையே, நண்பன் கஞ்சி வாங்கிட்டு வரும் போது, இதே மாதிரி ஆப்பிள் தூக்கின் மூடியை திறந்து, ஆர்வக் கோளாறினால் ஒரு சுத்து சுத்தினானே பார்க்கலாம்,
ஆப்பிள் தூக்கு அப்படியே அந்தரத்தில் நிற்க,
கொதிக்கின்ற கஞ்சி தலையில் கொட்ட,
அடிபட்ட நாய் மாதிரி நொய்.. நொய் என்று கத்த,
இதை பின்னாடி வந்துக்கொண்டு இருந்த அவனுடைய அப்பா பார்த்து, சூடாகி, நச்ச் என்று மண்டையில் கொட்ட..
குத்துக்கல் தெருவில் அடிவாங்கிய நாய், சதுக்கை தெருவில் மீண்டும் அடி வாங்கின கதையாக ஆகிவிட்டது.
- அப்புறம் என்ன, வெந்த புண் ஆறுவதற்குள் ஹஜ்ஜுப் பெருநாள் வந்து விட்டது.
3. உழைப்பு உன்னதமானதே! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU)[16 July 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28702
உரம் பொருந்திய உறுதியான உள்ளமுடையவரின் உழைப்புக்கு வயது ஒரு தடையாக இருக்காது. ஐஸ் விற்கும் முதியாவரின் முகம் பார்தேன்! இவரைப்பற்றி ஒரு சிலவரி.
விடிகாலையிலேய எழுந்து ஐஸ் பெட்டி சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தே திருச்செந்தூருக்கு சென்று ஐஸ்சை நிரப்பிக்கொண்டு நடந்தே வந்து நடு நிசி வரை
காயல்பட்டனம்,ஆ.நேரி வரை சென்று விற்கும் காட்சியை நேரிலே பார்த்து மனம் நெகிழ்ந்து போனேன்!
அடுத்தவர்களிடம் அன்டிப்பிழைக்காமல் ஆயுட்காலம் வரை தன் கால்களே தனக்குதவி என்ற தன்மான மனிதர்கள் இருக்கும்வரை அவர்களுக்கு உடலும் உள்ளமும் என்றும் தளர்ச்சியடையாது!
எங்களுடைய அந்த காலத்து பழைய நினைவுகளை தாங்கள் எங்கள் கண்முன் கொண்டு வந்தது பாரட்டுக்குரியது தான் ......இது போன்ற நிழல் படத்துடன் ....நமது ஊரின் நிகழ்வுகளை தாருங்கள் ....நாங்கள் துளை தூரத்தில் இருப்பதால் ...இந்த நிழல் படங்கள் எங்களை ஊருக்கே நாங்கள் நேரில் சென்று பார்ப்பது போன்று அழைத்து செல்கிறது .....
ரம்ஜான் கொண்டாட்டம் ...நம் சிறுவர்களுக்கு தான் போல் தெரிகிறது ...அவ்வளவு மகிழ்சி சிறுவர்களுக்கு தான்.இவர்களின் சந்தோசம் தான் நம் யாவர்களுக்கும் தேவை .........
ஆமா இந்த சிறுவன் எடையை விட ....அவன் வைத்து இருக்கும் தூக்கு எடை அதிகமாகவே இருக்கும் போல் தெரிகிறது.....
6. Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[16 July 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 28708
என்ன ரபீக் பாய் போட்டோ மட்டும்தான் இருக்கு, வழமையா அதற்கு ஏற்றார் போல் தாங்கள் கொடுக்கும் கமெண்ட் இல்லை, ஏமாற்றி விட்டீர்களே, உங்களிடமிருந்து என் போன்ற மக்கள் அதிகம் எதிர் பார்க்கிறோம் (படத்தையும் அதற்கேற்ற கம்மேன்டையும்)
9. வாழ்க வளமுடனும், வனப்பான காட்சிப்பெட்டியுடனும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[17 July 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28714
புளியானத்தில் எனென்ன போட்டிருக்கிறது என்று டக்கென்று சொல்ல முடியுமா? எல்லாம் கலந்த ஒரு கலவையான
புளி பானம்! இது துணை பானமாக இருந்தாலும் இது மிக மிக தேவையான பானம்,பெரும்பாலோருக்கு! அது போல,
மளிகைகடை, மழலியர் விளையாட்டு, மாடு மேயும் காட்சி முதல் காய்தே மில்லத் போர்டு வரை பலபொருள் பொட்டலக் காட்சிகளை கட்டி தந்திருக்கும் சகோதரர் ரபீக் அவர்கள், உங்களுக்கு தேவையான பண்டங்களை பருகிக்கொள்ளுங்கள் என்று காட்சிக்கடை விரித்திருக்கும் அவருக்குதான் எவ்வளவு பெரிய மனசு, வாழ்க வளமுடனும், வனப்பான காட்சிப்பெட்டியுடனும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross