காயல்பட்டினம் தைக்கா தெருவின் நடுப்பகுதியில், மருத்துவர் தெருவை அணைத்தாற்போல் அமைந்துள்ளது மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளி.
இப்பள்ளியில், வழமை போல இவ்வாண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, மஹல்லா ஜமாஅத்திற்குட்பட்ட குடும்பங்களுக்கு வினியோகம் செய்யப்படுவதுடன், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
வீடுகளுக்கான வினியோகம், நாள்தோறும் மதியம் 03.00 மணிக்குத் துவங்கி, சுமார் ஒரு மணி நேரம் நடைபெறுகிறது. அந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த 60 முதல் 70 குடும்பத்தினர் வரை பாத்திரங்களுடன் வருகை தந்து, நோன்புக் கஞ்சியைப் பெற்றுச் செல்கின்றனர். காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் நாள்தோறும் 30 முதல் 40 பேர் வரை கலந்துகொள்கின்றனர். இந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தம் இல்லங்களில் நோன்பு துறந்துவிட்டு பள்ளிக்கு வருவதை வழமையாகக் கொண்டுள்ளதால், பள்ளியில் நோன்பு துறக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை மற்ற பள்ளிகளைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும்.
இஃப்தார் நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இப்பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.எம்.உஸைர் சேவையாற்றி வருகிறார். துணைத்தலைவர்களாக, ஹாஜி கத்தீபு ஷேக் ஸலாஹுத்தீன், ஹாஜி எஸ்.எஸ்.எம்.புகாரீ ஆகியோரும், செயலாளர் ஏ.எஸ்.அஷ்ரஃப், துணைச் செயலாளர்களாக ஹாஜி அ.பு.செய்யித் உமர், ஹாஜி பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, பொருளாளர்களாக ஹாஜி அமீர் அப்துல்லாஹ், எம்.எல்.ஹாரூன் ரஷீத் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
ஹாஃபிழ் செய்யித் நூஹ் பள்ளியின் இமாமாகவும், பண்ணை அபுல் காஸிம் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையை, தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் செய்யித் இப்றாஹீம், கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் டூட்டி ஷெய்கு அப்துல் காதிர் ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
நாள்தோறும் தராவீஹ் தொழுகை நிறைவுற்ற பின்னர் நபிகளார் புகழோதும் வித்ரிய்யா மஜ்லிஸ் நடத்தப்பட்டு, அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்படுகிறது.
இப்பள்ளியின் கடந்த ஆண்டு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தகவல்:
A.S.அஷ்ரஃப்
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |