உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர் முதலிடங்களைப் பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் பரிசுகளைப் பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு, கல்வித்துறை மற்றும் பசுமை ஆணையம் ஆகிய துறைகள் மூலம் - மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி மற்றும் பொருட்களை மறுசுழற்சி செய்யும் போட்டிகள், கடந்த ஜூன் மாதம் 05ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 3 பிரிவுகளாக, அந்தந்த பள்ளிகளில் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 96 மாணவியர் கலந்துகொண்டனர்.
பொருட்கள் மறுசுழற்சி போட்டியில், இப்பள்ளியின் 07ஆம் வகுப்பு மாணவி எஸ்.ஓ.மஃஸுமா, 11ஆம் வகுப்பு மாணவி எஸ்.எச்.முஷ்ஃபிகா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
06ஆம் வகுப்பு மாணவி எம்.ஐ.ஆயிஷா அம்மாரா, 09ஆம் வகுப்பு மாணவி எம்.எஸ்.ஃபாத்திமா ஹமீதா, 11ஆம் வகுப்பு மாணவி எஸ்.ஸஃப்ரீன் ஆகிய மாணவியர் இரண்டாமிடம் பெற்றனர்.
09ஆம் வகுப்பு மாணவி எம்.ஏ.ஏ.முஷர்ரஃபா ஸுல்தானா மூன்றாம் பரிசைப் பெற்றார்.
ஓவியப் போட்டியில், 08ஆம் வகுப்பு மாணவி எம்.எஸ்.ஃபாத்திமா நஸீஹா இரண்டாம் பரிசையும், 11ஆம் வகுப்பு மாணவி வி.சத்யா மூன்றாம் பரிசையும் பெற்றனர். பரிசுகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பரிசளிப்பு விழாவில் முன்னிலை வகித்தார்.
பரிசுபெற்ற எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் இம்மாணவியரை, பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |