காயல்பட்டினம் கடற்கரையில், நேற்று (ஜூலை 16) பதிவு செய்யப்பட்ட மாலை நேர காட்சிகள் தான் இவை.
சில காரணங்களை முன்வைத்து, காயல்பட்டினம் கடற்கரை அழகுபடுத்தப் படுவதற்கு முன்பு வரை, காற்று வாங்க விரும்புவோர் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும் நிலையில்தான் இருந்தது. நிலக்கடலையைப் பொதியில் வைத்துக்கொண்டு விற்கும் சிலரைத் தவிர வேறு வணிகர்களையோ, நிலக்கரி அடுப்பைப் பயன்படுத்தி வடை சுட்டு விற்கும் வணிகர்களையோ அன்று காண இயலாது.
கடற்கரை அழகுபடுத்தப்பட்டு, ஒளிவெள்ள விளக்கும் நிறுவப்பட்ட பின்னர், அதுவரையிலும் சாதாரணமாகக் கண்ட அதே கடற்கரையை பொதுமக்கள் வியப்புடன் காணத் துவங்கினர். கடற்கரைக்கு வந்து செல்வதற்கென்றே தனி நேரம் ஒதுக்கினர். வெளியூர்களைச் சேர்ந்தவர்களும், பொழுதுபோக்கிற்காக கடற்கரைக்கு வந்து செல்லத் துவங்கினர்.
நாளுக்கு நாள் இக்கூட்டம் அதிகரித்து, தற்போது வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளிலும், பள்ளி - கல்லூரிகளின் இதர விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூட்டம் கடற்கரையில் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக, வணிகர்களின் எண்ணிக்கையும் கனிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.
இப்படி, நாள்தோறும் பரபரப்புடன் காட்சியளிக்கும் காயல்பட்டினம் கடற்கரை, ரமழான் - நோன்பு காலங்களில் மட்டும் வெறிச்சோடி காணப்படும். இடி - மின்னல் - மழை என வானிலை வாட்டி வதைத்தாலும் கூட கடற்கரைக்கு மறக்காமல் வாடிக்கையாக வந்தமர்ந்து செல்லும் சிலரையும் கூட இந்நாட்களில் காண முடிவதில்லை.
எனினும், சனி - ஞாயிறு வாராந்திர விடுமுறைக் காலங்களில் பிற ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் சற்று கூட்டமாகவும், இதர நாட்களில் ஓரிருவரும் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.
நடப்பு ரமழான் காலத்தில், வார நாட்களின் மாலை நேரங்களில் கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்களின் மொத்த எண்ணிக்கையே வெறும் ஐந்து முதல் பத்து பேர் வரைதான் இருக்கும்.
ரமழான் காலத்தின் வெறிச்சோடிய கடற்கரையை அசைபடமாகக் காண இங்கே சொடுக்குக!
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:50 pm / 17-7-2013] |