தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் வீர தீர செயல்களுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 6 வயது முதல் 18 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகள் மற்ற குழந்தைகளுக்கு முன் உதாரணமாக குழந்தைகள் துணிச்சலாக சாதித்த வீர தீர செயலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
வீர தீர செயலுக்கான நடைபெற்ற சம்பவம் ஜூலை 2012 முதல் 30.06.2013 க்குள் நிகழ்ந்ததாக இருக்கலாம். தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விண்ணப்பங்களை 30.07.2013க்குள் மாவட்ட சமூகநல அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
5A டூவிபுரம் 11 வது தெரு,
(சங்கர நாராயண பிள்ளை கோவில் பூங்கா பின்புறம்),
தூத்துக்குடி 628 003.
தகவல்:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி
|