காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவின் தென்முனையில் அமைந்துள்ளது ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளிவாசல். இப்பள்ளி ஜமாஅத் நெசவு ஜமாஅத் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பள்ளியில், எம்.கே.எல்.ஷாஹுல் ஹமீத் தலைவராக சேவையாற்றி வருகிறார். பி.எம்.ஏ.ஜின்னா செயலாளராகவும், ஏ.எம்.எஸ்.அஹ்மத் முஹ்யித்தீன் என்ற கோப்பி ஹாஜி பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
பழைய நிலையில், நீர்க்கசிவுடன் காணப்பட்ட இப்பள்ளியின் தரைப்பகுதியும், இற்றுப்போன மின் கம்பிவடங்களும், கடந்த ஆண்டு ஹஜ் பெருநாளையடுத்து நடைபெற்ற பணிகளின்போது அகற்றப்பட்டு, புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றன.
பள்ளியின் ஐவேளைத் தொழுகைக்கான இமாமாக - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஏ.அபுல்ஹஸன் ஷாதுலீ என்பவரும், பிலாலாக - படுக்கப்பத்து என்ற ஊரைச் சேர்ந்த அப்துஸ்ஸமத் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழான் தராவீஹ் - சிறப்புத் தொழுகையை, காயல்பட்டினம் நெசவுத் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எம்.ஒய்.கிழுறு முஹ்யித்தீன் வழிநடத்துகிறார்.
நடப்பாண்டு கஞ்சி தயாரிப்பு மற்றும் இதர ரமழான் தொடர்பான ஏற்பாடுகளனைத்தையும் செய்வதற்காக, எம்.கே.அப்பாஸ் ஷாஹுல் ஹமீத், ஜலால், பாதுல் அஸ்ஹப் உள்ளிட்டோரடங்கிய தனிக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ரமழான் மாதம் முழுக்க தினந்தோறும் கஞ்சி தயாரிப்பு, ஊற்றுக் கஞ்சி, இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள் ஆகியன இக்குழுவின் பொறுப்பிலுள்ள பணிகளாகும்.
மாலை நேரத்தில் வினியோகிக்கப்படும் ஊற்றுக்கஞ்சியை இந்த ஜமாஅத் மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் நாள்தோறும் சுமார் 60 முதல் 80 பேர் வரை பங்கேற்கின்றனர்.
17.07.2013 புதன்கிழமையன்று நடைபெற்ற நோன்புக் கஞ்சி வினியோக (ஊற்றுக் கஞ்சி) படக்காட்சிகள் வருமாறு:-
அதே நாளில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படக்காட்சிகள் வருமாறு:-
இப்பள்ளியின் கடந்த ஆண்டு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நோன்பாளிகளுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை பதார்த்தங்கள், கறி கஞ்சி, அவ்வப்போது வெண்கஞ்சி மற்றும் சட்னி உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |