ஆறுமுகனேரியில் தியாகிகள் தின விழா, பள்ளிவாசல் பஜாரில் இம்மாதம் 15ஆம் தேதி திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
ஆறுமுகனேரி கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி செயலாளர் சி.தாண்டேஸ்வரன் தலைமை வகித்தார். நகர் நல மன்ற தலைவர் பி.பூபால்ராஜன் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கனரா வங்கியில் சிறப்பாகப் பணியாற்றிய பணியாளர் ராஜாமணிக்கு சேவை விருது வழங்கினார்.
ஆறுமுகனேரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவ மாணவிகள் பல்வேறு தலைவர்கள் பற்றி உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் நேரு காமராஜ் சோசலிச இயக்க தலைவர் தூ.ராமெஜெயம், காமராஜ் நற்பணி மன்ற பொதுச்செயலாளர் கோ.மு.கோசல்ராம், ஊர் நலக் கமிட்டி தலைவர் யு.ராமஜெயம், ஓய்வு பெற்ற தகவல் தொடர்புத்துறை அலுவலர் பகவதி பாண்டியன், கே.கே.சற்குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கல்வி சங்க தலைவர் எஸ்.துரைப்பாண்டியன் நன்றி கூறினார். |